சித்த வைத்திய அகராதி 2801 – 2850 மூலிகைச் சரக்குகள்
கடுஞ்சாரம் – நவச்சாரம்
கடுஞ்சீரகந்தச்செடி – நேத்திரஞ்சிமிட்டிச்செடி
கடுதீத்தாதி – வெண்கடுகு
கடுதும்பிக்கொடி – பேய்ச்சுரை
கடுநிம்பச்செடி – நிலவேம்புச்சேடி
கடுந்தாளிச்செடி – வெண்தாளிச்செடி
கடுந்திச்செடி – நாயுருவிச்செடி
கடுந்தீபவிருட்சம் – சோதிவிருட்சம்
கடுபுடுகொள்ளுச்செடி – காட்டுக்கொள்ளுச்செடி
கடுபூரிவல்லிமரம் – ஈருவல்லிமரம்
கடுப்படக்கிச்செடி – வெதுப்படக்கிச்செடி
கடுப்பதாதிமரம் – ஈன்மரம்
கடுப்பூமத்தைச்செடி – கருவூமத்தைச்செடி
கடுப்பேகிகமரம் – உதிரவேங்கைமரம்
கடுப்பை – வெண்கடுகு
கடுமஞ்சரிச்செடி – நாயுருவி
கடுமாசகமரம் – காஞ்சிரைமரம்
கடுமிசப்புல் – உப்பங்கோரைப்புல்
கடுமுட்கத்திரிக்கொடி – கண்டங்கத்திரிக்கொடி
கடுமேதிவிருட்சம் – எருமைவிருட்சம்
கடும்பலைக்கிழங்கு – கருணைக்கிழங்கு
கடும்பைக்கடுகு – வெண்கடுகு
கடுவங்கம் – வெள்வங்கம்
கடுவன்மரம் – மாவுலிங்கமரம்
கடுவாய்ச்செடி- நாய்த்துளசி
கடுவிலிரோகிணி – கமுகுரோகிணி
கடுவேலைப்பாசி – கடற்பாசி
கடோpயமஞ்சள் – மரமஞ்சள்
கடைகெட்டமரம் – இலட்சைகெட்டமரம்
கடைச்சிக்கொடி – நெட்டிக்கொடி
கடைச்சித்தலரி – ஈழத்தலரிசெடி
கடைச்சித்தாழை – பரங்கித்தாழை
கட்டஞ்சலி – மூக்கு
கட்டாரிப்பூண்டு – எழுத்தாணிப்பூண்டு
கட்டிமூதண்டமரம் – கொடுக்காப்புளிமரம்
கட்டுக்கொடி – திசைக்கருடன்க்கொடி
கட்டுசாரைச்செடி – மருளுமத்தைச்செடி
கட்பலமரம் – தான்றிமரம்
கட்பலாமரம் – கானற்பலாமரம்
கணபுடம் – நூறெருப்புடம்
கணப்பாண்டுபோக்கிக்கொடி – வெண்கழற்சிக்கொடி
கணப்பூண்டிலை – சுடுதுரத்திசெடி
கணமாங்கிசம்போக்கி – அபின்
கணமூலிச்செடி – பெருந்தும்பை
கணமேசெஞ்சீவிச்செடி – வனமிரட்டிச்செடி
கணமேகம்போக்கி – திப்பிலி
கணவசாரம் – நவச்சாரம்
கணவமரம் – அரசமரம்
கணவீரச்செடி – அலரிச்செடி
கணவுமூங்கிகம் – விஷமூங்கில்




