சித்த வைத்திய அகராதி 3301 – 3350 மூலிகைச் சரக்குகள்
கருவூமத்தைச்செடி – கருப்பூமத்தைச்செடி
கருவேசரிக்கொடி – கழுதைப்பாலாட்டங்கொடி
கருவேப்பிலை – கறிவேப்பிலை
கருவேம்புச்செடி – நிலவேம்பு
கருவேம்புமரம் – கருவேல்மரம்
கருவேல்மரம் – கருவேலாமரம்
கருவோடு – பேரண்டம், தலைஓடு
கரைகண்டர் – துருசு
கரைக்ணடுகச்செடி – கருவீழிச்செடி
கரைக்கல்லோலம் – கடற்பாசி
கரைக்கல்லோவப்பாசி – நீர்ப்பாசி
கர்ச்சூரங்காய் – கழற்சிக்காய்
கர்ச்சூரச்சேதன் – முருங்கைமரம்
கர்ச்சூரற்காய் – பேரிச்சங்காய்
கர்ணகண்டுரிமரம் – கடலழிஞ்சிமரம்
கலசக்சுரைக்கொடி – கும்பச்சுரைக்கொடி
கலப்புசுவன்னி – நவலோகபேதி
கலப்புநெய் – பலநெய்
கலப்புப்பாணிதம் – பலவெண்ணெய்
கலப்பைக் கிழங்கு – நார்த்திகைக் கிழங்கு
கலம்பகரிப்பட்டை – சுருளுப்பட்டை
கலம்பாசிசெடிவேர் – சீமைச்செடிவேர்
கலம்பாதிகவெற்றிலை – கற்பூர வெற்றிலை
கலம்பிக்கொடி – பசளைக்கொடி
கலராலகச்செடி – நீர்க்குளரிச்செடி
கலவைக்கீரை – பலகீரை
கலாகிஞ்சுகமரம் – கருவாகைமரம்
கலிகமரம் – வன்னிமரம்
கலிகாரிடக்கொடி – வாட்சுண்டிக்கொடி
கலிகைச்செடி – நாகமல்லிகை
கலிங்கத்துருமரம் – தான்றிமரம்
கலிங்கமரம் – வெட்பாலைமரம்
கலிய்காதீதக்கொடி – நாய்ப்பாகற்கொடி
கலிங்கம் – மிளக
கலிசத்திரக்கஞ்சி – கூழ்க்கஞ்சி
கலிசமரம் – வன்னிமரம்
கலிஞ்சகமரம் – வன்னிவாகைமரம்
கலிதியரிசி – திப்பிலியரிசி
கலித்துருமமரம் – தான்றிமரம்
கலிந்தப்பூடு – மலைதாங்கிப்பூடு
கலிமராகச்செடி – கிலுகிலுப்பை
கல்மாரிகம் – கேழ்வரகு, கேப்பை
கலிமாலிகமரம் – அகில்மரம்
கலியமரிசி – வெட்பாலையரிசி
கலியாணப்பூ – இலுப்பைப்பூ
கலியானப்பூசிணி – வெள்ளைப்பூசிணி
கலியாணமுருங்கைமரம் – முள்முருங்கைமரம்
கலியானவஞ்சிமரம் – கெட்டிவஞ்சிமரம்
கலியாணிமரம் – நீர்க்கடம்பமரம்
கலினாவரகு – கூவரகு




