சித்த வைத்திய அகராதி 4001 – 4050 மூலிகைச் சரக்குகள்
காவகக்கொட்டை – சேங்கொட்டை
காவகரகிதக்கள்ளி – திருகுகள்ளி
காவட்டம்புல் – காமாட்சிப்புல்
காவணக்கொடி – தெள்ளுக்கொடி
காவற்கலிமரம் – நவ்வல்மரம்
காவற்குலிகமரம் – திப்பிலிநவ்வல்மரம்
காவாச்செடி – காட்டுமல்லிகை
காவாவிப்பச்சைச் செடி – திருநீற்றுப்பச்சைச்செடி
காவாளைச்செடி – காய்வேளைச்செடி
காவிகாத்தினை – கருந்தினை
காவிதக்கொடி – கருங்குவளைக்கொடி
காவிரவறுகுச்செடி – கறுப்பறுகுச்செடி
காவிளைச்செடி – காய்வேளைச்செடி
காவீரச்செடி – அலரிச்செடி
காவுரோகணி – பீதரோகிணி
காளகச்செடி – மதுக்காரைச்செடி
காளகச்சோளம் – செஞ்சோளம்
காளகாசச்செடி – அவுரிச்செடி
காளகாதமரம் – பரம்பைமரம்
காளசிகமரம் – எட்டிமரம்
காளசூரவேர் – சிவதைவேர்
காளவுலை – கரவுலை
காளாகிகமரம் – திருவாத்திமரம்
காளான் – கரிக்காளான்
காளிகத்தும்பை – பெருந்தும்பைச்செடி
காளிகாச்செடி – மணத்தக்காளிச்செடி
காளிகாத்தெள்ளு – குரவந்தெள்ளு
காளிந்தாகிதவிருட்சம் – தில்லைவிருட்சம்
காளிந்தச்செடி – ஏலச்செடி
காளிந்திமரம் – வாகைமரம்
காளிமோகப்பச்சை – திருநீற்றுப்பச்சைக்கொடி
காளினிக்கொடி – கட்டுக்கொடி
காளினிபூண்டு – தீமுறிப்பூண்டு
காளினியச்செடி – கத்திரிச்செடி
காறடிச்செடி – மருக்காரைச்செடி
காறற்கொட்டிக்கிழங்கு – கண்மாய்க்கிழங்கு
காற்சிகச்செடி – நாஞருவிச்செடி
காற்செபவரிசி – தினையரிசி
காற்முகிற்பாஷாணம் – மேகபாஷாணம்
காற்றிகச்செடி – காயாங்குலைச்செடி
கானகக்குறத்தி – தேன்
கானகசாரிமரம் – கோங்குமரம்
கானகசீரம் – கருஞ்சீரகம்
கானக்குதிரை – மாமரம்
கானக்குறத்தி – தேன்
கானத்தேறு – மஞ்சள்
கானப்பத்திரம் – வில்வயிலை
கானப்பயறு – கொள்ளுப்பயறு
கானப்பலா – காட்டுப்பலாமரம்
கானமல்லிச்செடி – காட்டுமல்லிகைச்செடி




