HomeUncategorizedசித்த வைத்திய அகராதி 451 - 500 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய அகராதி 451 – 500 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய அகராதி 451 – 500 மூலிகைச் சரக்குகள்

அமந்தலப் பட்டை – செஙகத்தாரிப் பட்டை      
அமந்தாசிகப்பட்டை – சுருளுப் பட்டை        
அமராஞ்சனமதம் – சந்தனமரம்      
அமரிதக்காய் – கடுக்காய்         
அமரிதாவிகச்செடி – செங்கரிப்பான் செடி        
அமரிப்புல் – பேய்ப்புல்          
அமரிப்பூகச்செடி – செங்கரந்தை       
அமரியமரம் – குருந்துமரம்         
அமரியுப்பு – சிருநீருப்பு          
அமலகமரம் – அரிநெல்லிமரம்
அமலக்காய் – அரிநெல்லிக்காய்         
அமலமஞ்சள் – மரமஞ்சள்        
அமலை – சோறு, அரிசிக்சோறு             
அமலைக்காய் – கடுக்காய்        
அமலைதாரம் – அரிதாரம்          
அமளைப்பூண்டு – அரிப்பூண்டு               
அமளோகிதத்தண்டு – செங்கீரைத்தண்டு         
அமனிதச்செடி – புளியாரை           
அமாமிக்கடம்பு – செங்கடம்பு          
அமிரம் – மிளகு               
அமிராகிதமரம் – செங்கருங்காலி             
அமிர்தச்கொடி – சீந்திற்கொடி          
அமர்தசாமரம் – செஞ்சிந்தகத்தி         
அமுக்கிராச்செடி – அசுவகந்தி          
அமுங்காக்கொடி – நெட்டி கொடி         
அமுசகக்கொடி – செருப்படை        
அமுதகரந்தை – சிவகரந்தை          
அமுதக்காய் – கடுக்காய்          
அமுதக்குவிகம் – செங்கற்றாழை       
அமுதக்கொடி – சீந்திற்கொடி        
அமுதக்கோணிகச்செடி – செங்கிழுவைச்செடி
அமுதங்கச்செடி – சதுரக்கள்ளி
அமுதசர்க்கரை – சீந்திற்சர்க்கரை
அமுதசாரமரம் – வெள்வேலா
அமுதசாரம் – தேன், கற்கண்டு
அமுதச்சேவிகம் – சிறுகுறிஞ்சா
அமுதச்சோகிதம் – செங்குமிழ்
அமுதசுரம் – மஞ்சிட்டிவேர்
அமுதநீர் – பிண்டநீர், சூதகநீர்
அமுதமரம் – நெல்லிமரம்
அமுதவல்லிக்கொடி – சீந்திற்கொடி
அமுதவிந்து – வாலைரசம்
அமுதாரிக்கொடி – பூனைக்காலி
அமுதுரைமரம் – எலுமிச்சை
அமுத்தமரம் – நெல்லிமரம்
அமுரிநீர் – சிறுநீர்
அமுர்தபலக்கொடி – பேய்ப்புடல்
அமேதகம்நீக்கி – கற்றாழை
அமேத்தியமரம் – மூங்கில்மரம்
அமைச்சாகிதச்செடி – செங்குருந்தொட்டிச்செடி

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments