சித்த வைத்திய அகராதி 4101 – 4150 மூலிகைச் சரக்குகள்
கிட்டிரக்கொடி – நெருஞ்சிற்கொடி
கிட்டிலக்கொடி – அரக்காம்பற்கொடி
கிணிதிச்செடி – கிலுகிலுப்பைச்செடி
கித்துகில் – சூந்தற்கமுகுமரம்
கிந்தாதிக்கொடி – துடரிக்கொடி
கிந்திகமூலம் – திப்பிலிமூலம்
கிம்மியக்கிழங்கு – ஆகாசக்கருடன்கிழங்கு
கிரகசாரம் – நவச்சாரம்
கிரணியமரம் – அரிநெல்லிமரம்
கிரசேமிரம் – பச்சைக்கற்பூரம்
கிரஞ்சகாமிரக்கொடி – தெல்லுக்கொடி
கிரஞ்சனமரம் – முருங்கைமரம்
கிரதமாலமரம் – கொன்றைமரம்
கிரந்திநாயகச்செடி – சிலந்திநாயகச்செடி
கிரந்திப்பூண்டு – கிரந்திநாயகப் பூண்டு
கிரந்திமாகிதமரம் – நச்சிலைக்கூமாமரமரம்
கிரந்திமூலம் – திப்பிலிமூலம்
கிராந்திலம் – தூதுவளைக்கொடி
கிரமாமுகிமரம் – கமுகுமரம்
கிராகதமுட்டி – நாகமுட்டிமரம்
கிராகதிச்செடி – நிலவேம்புச்செடி
கிராகிக்கள்ளி – ஆட்டுச்செவிக்கள்
கிராம்பு – லவங்கப்பூ
கிராவகக்கொடி – நரளைக்கொடி
கிராவணம் – வங்கம்
கிரிவப்பூடு – மலைதாங்கிப்பூடு
கிரிகன்னிக்கொடி – வெள்ளைக்காக்கணத்திக்கொடி
கிரிகைவிருட்சம் – தாளிப்பனை
கிரிச்சரிடக்காய் – சாதிக்காய்
கிரிச்சியமரம் – கப்பட்டிமரம்
கிரிதாங்கிவேர் – மலைதாங்கிவேர்
கிரித்தவமரம் – இருள்மரம்
கிரிமல்லிகைச்செடி – மலைமல்லிகைச்செடி
கிரிமல்லிப்பாசி – கொடிப்பாசி
கிரிமல்லிப்பாலைமரம் – வெட்பாலை மரம்
கிரிமிக்கிணியரிசி – வாலுளுவையரிசி
கிரியாத்துச்செடி – நிலவேம்புச்செடி
கிரிவாரிணிமாஞ்சல் – இரத்தமாஞ்சில்
கிரிடக்கொடி – வேலிப்பருத்திக்கொடி
கிரிடபமரம் – தாளிப்பனைமரம்
கிரிட்டிக்கொடி – பிரண்டைகொடி
கிருசயமரம் – மலைப்பூவரசுமரம்
கிருஷ்ணதுளசி – கருந்துளசி
கிருட்டிகாக்கொடி – கொட்டையிலாமுந்திரிக்கொடி
கிருட்டிசாரக்கொடி – தீம்பிரண்டைக்கொடி
கிருட்டிணசாகியம் – சமுத்திராப்பழம்
கிருட்டிணசீரம் – கடுஞ்சீரகம்
கிருட்டிணசோபிதக்கொடி – சம்பங்கிக்கொடி
கிஐட்டிணபாணமரம் – எட்டிமமரம்
கிருட்டிணபூசிதமரம் – சந்தண மரம்




