சித்த வைத்திய அகராதி 501 – 550 மூலிகைச் சரக்குகள்
அமைமரம் – கூந்தற்கமுகுமரம்
அமைமோனிச்செடி – செங்கொடுவேலிச்செடி
அமையப்புல் – இலாமிச்சைப்புல்
அமோகினிமரம் – பாதிரிமரம்
அம்பகக்கிழங்கு – சேம்புகிழங்கு
அம்பகாகிதம் – செங்கொட்டான்
அம்பகிப்பாளை – ஆடுதின்னாப்பாளைச் செடி
அம்பங்கியரிசி – விழாவரிசி
அம்பணமரம் – வாழைமரம்
அம்பாநேமிச்செடி – வெண்கிலுகிலுப்பைச்செடி
அம்பரை – நிமிளை
அம்பரைநாதம் – அப்பிரகம்
அம்பர் – சீமையம்பர்
அம்பலக்காணி – செங்கொய்யா
அம்பலக்காச்சி – வாதரக்காச்சி
அத்துலிக்கொடி – சிறு தெல்லுக் கொடி
அத்துவர்க்கயம் – மைச்சீரகம்
அநங்கலிச்செடி – சிறு தேட்கொடுக்குச்செடி
அகங்கன்பூ – இருவாட்சிப்பூ
அநுசூதைமரம் – புளியமரம்
அந்தகச்செடி – ஆமணக்குச்செடி
அந்தகாரமரம் – நெல்லிமரம்
அந்தகோரமரம் – நெல்லிமரம்
அந்தசடம் – வயிறு
அந்தாத்தாமரை – குளிர்தாமரை
அந்தரத்தேசரிக் கொடி – சிறுபசளைக் கொடி
அந்தரவல்லிக்கிழங்கு – கருடன் கிழங்கு
அந்தரவறுனிக்கொடி – சிறு நெருஞ்சிற் கொடி
அந்தரவனசப்பாசி – கொடிப்பாசி
அந்தரப்பனை – தொட்டிப் பனை, சிறுபனை
அந்திப்பீழைச்செடி – சிறுபீழை
அந்திப்பூச்செடி – அந்திமல்லிகைப் பூச்செடி
அந்திமந்தாரைச் செடி – அந்தி மல்லி கைச்செடி
அந்திமரித்தான்கொடி – சிறுபேய்க் குமட்டிச்கொடி
அந்திமலர்ந்தான் செடி – அந்தி பூச்செடி
அந்திமலாகிகச்செடி – அந்தி மந்தாரைச் செடி
அந்திமல்லிகைச் செடி – அந்தி மந்தாரைச் செடி
அந்திரலோகிதக்கொடி – சிறுபொடுதலைக் கொடி
அந்திவிருட்சம் – தில்லைவிருட்சம்
அந்திவீருகச்செடி – சிறுமுள்ளங்கிச் செடி
அந்தேசாலகமரம் – தேற்றாமரம்
அந்தேசோலிகப்பூண்டு – சிறுவெழுத்தாணிப்பூடு
அந்தோர்மரம் – நெல்லிமரம்
அபசகச்செடி – சிற்றிலந்தை
அபந்தலப்பட்டை – செங்கத்தாரிப்பட்டை
அபமார்க்கச்செடி – நாயுருவி
அபரமார்க்கச்செடி – நாயுருவி
அபானநீர் – குடத்துநீர்
அபானியக்காய் – கடுக்காய்
அபிரங்கிமரம் – கருநெல்லிமரம்




