சித்த வைத்திய அகராதி 551 – 600 மூலிகைச் சரக்குகள்
அபிற்சாந்துப்பட்டை – பூஞ்சாந்துப்பட்டை
அபிற்சீரமரம் – சிற்றீஞ்சுமரம்
அபின் – அபினி
அப்பகச்செடி – வட்டத்திருப்பி
அப்பாகாசச் சேம்புச்செடி – சீமைச்சேம்புச்செடி
அப்ரப்பட்டை – ஆவரம்பட்டை
அப்பளக்காரம் – சவுக்காரம்
அப்பாகவரிசி – வாலுளுவையரிசி
அப்பிரகநீர் – அவுரிநீர்
அப்பிரகம் – வியோசத்தி பாஷாணம்
அப்பிரியமரம் – ஓரியமரம்
அப்பிருதிப்பழம் – போPச்சம்பழம்
அப்பீரகமரம் – புளிப்புமாமரம்
அப்பீராப்பழம் – சீமையத்திப்பழம்
அப்பு – தண்ணீர்
அப்புத்திரட்டி க்கொடி – கட்டுக்கொடி
அப்புநீறு – கடலுப்பு
அப்புப்பு – கஞ்சியுப்பு
அப்புராமரம் – பாதிரிமரம்
அப்புலொகிதம் – சீமையிலந்தை
அப்புளண்டம் – தகரைச்செடி
அப்புளாகாசக்கொடி – வேரில்லாக் கொத்தான்கொடி
அப்பைக்கோவை – கற்கோவை
அப்பைச்சேவகச்செடி – சீமையாமணக்குச்செடி
அப்பைமரம் – கொன்றைமரம்
அப்பைமாரிகச்செடி – செங்கத்திரிச் செடி
அப்ரேகபாஷாணம் – வியோசத்தி பாஷாணம்
அமண்டலச்செடி – ஆமணக்கு
அமண்டலாதிமரம் – செங்கடம்பு
அமந்தலப்பட்டை – செங்கத்தாரிப்பட்டை
அமந்தாசிகப்பட்டை – சுருளுப்பட்டை
அமராங்சனமரம் – சந்தனமரம்
அமரிதக்காய் – கடுக்காய்
அமரிதாவிகச்செடி – செங்கரிப்பான்செடி
அமரிப்பூல் – பேய்ப்புல்
அமரிப்பூகச்செடி – செங்கரந்தை
அமரியமரம் – குருந்துமரம்
அமரியுப்பு – சிறுநீருப்பு
அமலகமரம் – அரிநெல்லிமரம்
அமலக்காய் – அரிநெல்லிக்காய்
அமலமஞ்சள் – மரமஞ்சள்
அமலைச்சோறு – அரிசிச் சோறு
அமலைக்காய் – கடுக்காய்
அமலைதாரம் – அரிதாரம்
அமளைப்பூண்டு – அரிப்பூண்டு
அமளோகிதத்தண்டு – செங்கீரைத்தண்டு
அமனிதச்செடி – புளியாரை
அமாமிக்கடம்பு – செங்கடம்பு
அமிரம் – மிளகு
அமிராகிதமரம் – செங்கருங்காலி




