சித்த வைத்திய அகராதி 5051 – 5100 மூலிகைச் சரக்குகள்
கொழுஞ்சிப்பூண்டு – நாய்வேளைச்செடி
கொழுந்திலை – தேயிலை
கொழுந்திலோதியமரம் – பேரகத்திமரம்
கொழுந்து – மருக்கொழுந்து
கொழுந்தொட்டிப்புல் – ஒட்டுப்புல்
கொழுமரம் – செம்மரம்
கொழுமாமிகச்செடி – பேரவுரிச்செடி
கொழுமிச்சைமரம் – நாரத்தை
கொழும்புகாவேர் – நன்னாரிவேர்
கொள்ளிகைச்செடி – எருமைநாக்கிச்செடி
கொள்ளிக்கன்னிமரம் – வன்னிவாகைமரம்
கொள்ளியமரம் – புங்கமரம்
கொள்ளிலைச்செடி – கொள்ளுக்காய்வேளைச்செடி
கொள்ளுக்காவேளை – கொழுஞ்சிச் செடி
கொள்ளுசிப்பாலைக்கொடி – ஊசிப்பாலைக்கொடி
கொள்ளுப்பயற்றின்கொடி – காணப்பயற்றின்கொடி
கொள்ளுப்பானிதச்செடி – சூரியகாந்திச்செடி
கொறிதலைச்செடி – நிலவேம்புச்செடி
கொறிப்புத்தமரம் – சருக்கரைவேம்புமரம்
கொறுக்கச்சிச்செடி – நாய்வேம்புமரம்
கொறுக்கச்சீரிகச்செடி – பேரவுரிச்செடி
கொறுக்காப்புளிமரம் – கொடுக்காப்புளிமரம்
கொறுக்கைத் தட்டை – நாணற்றட்டை
கொறுக்கைத்தாரிப்பட்டை – செங்கத்தாரிப்பட்டை
கொறுக்கைப்புளி – சீமைக்கொடுக்காப்புளி
கொறுக்கைப்பேனிக்கொடி – பேய்ப்பாற்சொரிக்கொடி
கொற்றான்கொடி – முடக்கொத்தான்கொடி
கொன்றைசூடிச்செடி – சிவகரந்தைச்செடி
கொன்றைமரம் – கொன்னைமரம்
கொன்றைவாருதிச்செடி – உமுரிச்செடி
கொன்னைமரம் – கொன்றைமரம்
கோகணமுட்கொடி – நெருஞ்சிற்கொடி
கோகநகைச்செடி – செந்தும்பைச்செடி
கோகந்தபாஷாணம் – கந்தகபாஷாணம்
கோகந்தபந்துகச்செடி – சூரியகாந்திச்செடி
கோகலாமரம் – கடம்பமரம்
கோகலிவாழைமரம் – மகரவாழைமரம்
கோகனகக்கொடி – தாமரைக்கொடி
கோகனச்சீரகம் – நச்சீரகம்
கோகனச்செடி – கையாந்தகரைச்செடி
கோகனவாதமரம் – மணிமுத்துவேங்கைமரம்
கோகிலவாசமரம் – மாமரம்
கோகிலவீசம் – மஞ்சிட்டி
கோகிலாச்செடி – சிறுகுறிஞ்சாச்செடி
கோகிலாட்சச்செடி – நீர்முள்ளிச்செடி
கோகிலாட்சதப் பால் – மட்டிப் பால்
கோகிலாட்சமரம் – மாதளைமரம்
கோகிலிக்கீரை – மணலிக்கீரை
கோகிலிமரம் – மணப்புங்குமரம்
கோகிலோற்சவமரம் – மாமரம்




