சித்த வைத்திய அகராதி 7451 – 7500 மூலிகைச் சரக்குகள்
சொற்னாகப்பூண்டு – கீரிப்பூண்டு
சொன்னல் – சோளம்
சோகமரம் – அசோகுமரம்
சோகமாதிதமரம் – கோங்குமரம்
சோகரோகிணி – கடுகுரோகிணி
சோகாக்கனகக்கொடி – பிள்ளைதாச்சிக்கொடி
சோகாரிமரம் – கடம்பமரம்
சோகிகாமரம் – மகிழம்பூமரம்
சோகிக்கீரை – தொயிலிக்கீரை
சோகிதலப்பூண்டு – காற்சிகைப்பூண்டு
சோங்கமரம் – அகில்மரம்
சோங்குவைச்செடி – பின்தொடரிச்செடி
சோசனப்பூடு – வெள்ளைப்பூடு
சோசாங்கினிச்செடி – துளசிச்செடி
சோணாகமரம் – பெருவாகைமரம்
சோணிதம் – மஞ்சள்
சோதகமரம் – கருந்தேவதாருமரம்
சோதிகவரிசி – வாலுளுவையரிசி
சோதிகவாரிக்கிழங்கு – புளிநாளைக்கிழங்கு
சோதிப்புல் – பிரகாசப்புல்
சோதிமயவேதி – பூநாகம்
சோதிவிருட்சம் – நிலஞ்சோதிவிருட்சம்
சோத்திரம் – காது, செவி
சோபலம் – சோம்பு
சோபனசினி – இடதுகை
சோபனநிதி – தாலி – திருமாங்கிலியம்
சோபாலிகைச்செடி – குடைமேற்குடைச்செடி
சோபிதவாளம் – நேர்வாளம்
சோமகண்ணிச்செடி – பொன்னாங்கண்ணிச்செடி
சோமசபன்னிமரம் – குங்கிலியமரம்
சோமநாயகக்கொடி – வேலிப்பருத்திக்கொடி
சோமவல்லிக்கொடி – சீந்திற்கொடி
சோமவாலிமரம் – பெருங்குமிழ்மரம்
சோமன் – சந்திரன்
சோமாக்கியக்கொடி – தாமரைக்கொடி
சோமபலக்கொட்டை – சேராங்கொட்டை
சோம்பாகமரம் – புள்ளுமருதுமரம்
சோம்புச்சீரகம் – பெருஞ்சீரகம்
சோம்பூசிகமரம் – கருமந்தாரைமரம்
சோரபுட்பச்செடி – பீச்சுவிளாத்திச்செடி
சோரபேதி – அஞ்சனபாஷாணம்
சோரன் – வெடியுப்பு – நாகம் – வீரம்
சோரன்கிழங்கு – பூமிச்சருக்கரைக்கிழங்கு
சோரி – இரத்தம் – உதிரம்
சோளத்தட்டை – வெள்ளைச்சோளத்தட்டை
சோறுகொல்லி – அன்னபேதி
சோற்றுக்கற்றாழை – குமரிக்கற்றாழை
சோற்றுருவி – பூராவுடல் – சர்ரம்
சோனகப்பூ – நாகப்பூ
சோனாகமரம் – பெருவாகைமரம்




