HomeUncategorizedசித்த வைத்திய அகராதி 5251 - 5300 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய அகராதி 5251 – 5300 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய அகராதி 5251 – 5300 மூலிகைச் சரக்குகள்

கெளரிமாதிமரம் – சரளைத் தேவதாரிமரம்
கெளரியமரம் – கருவேப்பமரம்
கௌலகம் – வால்மிளகு
சகசரிகமரம் – மருதோன்றிமரம்
சகசாசிகச்செடி – மிளகுதக்காளிச்செடி
சகசாச்செடி – சிறுகுறிஞ்சாச்செடி
சகசீலகச்செடி – முட்டைக்கோசுச்செடி
சகடமரம் – தமரத்தைமரம்
சகடிகவிருட்சம் – முண்டனிவிருட்சம்
சகத்திரவீரியப்புல் – அறுகம்புல்
சகத்திராமிக்கொடி – முப்பிரண்டைச்செடி
சகரிகச்செடி – நாயுருவிச்செடி
சகரூபகச்செடி – முள்ளிக்கத்தரிச்செடி
சகாடமரம் – பெருமரம்
சகாடிக்கொடி – கருடக்கொடி
சகாதமரம் – வேப்பமரம்
சகாதேவிச்செடி – பொன்னாங்கண்ணிச்செடி
சகாமியமரம் – ஆலமரம்
சகாமோனிச்செடி – சீமைச்செடி
சகாதீதமரம் – மலைமொச்சிமரம்
சகியங்கோவைக்கிழங்கு – அப்பைக்கோவைக்கிழங்கு
சகியச்செடி – சேம்புச்செடி
சகிலாகித்திப்பிலி – கண்டத்திப்பிலி
சகுடைமரம் – சிற்றகத்திமரம்
சகுண்டகக்கீரை – முக்குளிக்கீரை
சகுண்டாகாக்கொடி – ஆடுதின்னாப்பாளைக்கொடி
சகுண்டகி – நரபிக்கொடி
சகுண்டம் – மாக்கொடி
சகுண்டிகைமரம் – கமுகுமரம்
சகுலமரம் – மொந்தைவாழைமரம்
சகுலாட்சச்செடி – வெள்ளறுகுச்செடி
சகுலாதசமரம் – மீனைமரம்
சகோரகிச்செடி – செம்பரத்தைச்செடி
சகோரச்சோபிதச்செடி – முட்குறண்டிச்செடி
சக்கரக்கொடி – பீர்க்குக்கொடி
சக்கரதாபச்செடி – விஷ்ணுகரந்தைச்செடி
சக்கரபதிச்செடி – தகரைச்செடி
சக்கரபுட்பச்செடி – குப்பைமேனிச்செடி
சக்கரமரம் – மல்லிகைமரம்
சக்கராபந்தச்செடி – வட்டத்துத்திச்செடி
சக்காரிகமரம் – தேமாமரம்
சக்காரிகக்கொடி – மாந்தக்கொடி
சக்கிரகமரம் – அத்திமரம்
சக்கிரகாசிகக்காய் – மாசிக்காய்
சக்கிரகாரக்கொடி – புலிதொடக்கிக்கொடி
சக்கிரபந்து – சூரியன்
சக்கிரபுட்பிச்செடி – குப்பைமேனிச்செடி
சக்கிரப்புளிச்சக்கீரை – செம்புளிச்சற்கீரை
சக்கிரப்புளிமரம் – இனிப்புப்புளிமரம்
சக்கிரமண்டலிச்செடி – ரணநாயகச்செடி

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments