சித்த வைத்திய அகராதி 5301 – 5350 மூலிகைச் சரக்குகள்
சக்கிராங்கிரோகிணி – கடுகுரோகிணி
சக்கிராத்திதமரம் – மாமரம்
சக்கிராமிச்செடி – தகரைச்செடி
சக்கிரிவுதம் – கழுதை
சங்கங்குப்பிச்செடி – பீச்சுவிளாத்திச்செடி
சங்கங்கோலகச்செடி – மிளகாய் நங்கைச்செடி
சங்கஞ்செடி – குண்டலாதிச்செடி
சங்கநிதிச்செடி – கிலுகிலுப்பைச்செடி
சங்கபாஷாணம் – தவளபாஷாணம்
சங்கபோஷ்டம் – புணாச்சி
சங்கரோகிணி – கடுகுரோகிணி
சங்கனனம் – நரம்பு
சங்காரிப்பயிர் – குதிரைவாலிப் பயிர்
சங்காலிப்பத்திரி – மாசிப்பத்திரி
சங்கினிச்செடி – பீச்சு விளாத்திச்செடி
சங்குசூலி – ஆமை
சங்குச்செடி – இசங்குச்செடி
சங்குணப்புல் – நான்முகப்புல்
சங்குநிதிச்செடி – கிலுகிலுப்பைச்செடி
சங்குநீர் – அண்டநீர்
சங்குபுட்பக்கொடி – காக்கணத்திக்கொடி
சங்குப்பூனைமதம் – சவ்வாது
சங்குமாருதமரம் – வேப்பமரம்
சங்குமூடகிச்செடி – வெண்கீரைத்தண்டுச்செடி
சசம்பரிச்செடி – ஆமணக்குசெடி
கசம்பரியக்கொடி – வெள்ளாம்பற்கொடி
சசாணிகக்கொடி – நன்னாரிகொடி
சசிதாகிகமரம் – வெண்சந்தனமரம்
சசியகஞ்சாச்செடி – சடைக்கஞ்சரச்செடி
சசியங்கிழங்கு – நிலப்பனைக்கிழங்கு
சசியாதீதப்பத்திரி – மாசிப்பத்திரி
சசியாமரம் – ஆச்சாமரம்
சசியாமிக்கள்ளி – முயற்செவிக்கள்ளி
சசுபமரம் – அசோகுமரம்
சசுபாகிதநெய் – முக்கூட்டுநெய்
சச்சடக்கொடி – தாமரைக்கொடி
சச்சினிமாதம் – ஆறாமாதம்
சச்சுண்டிக்கொடி – நீர்ச்சுண்டிக்கொடி
சஞ்சிகைப்பழம் – இலந்தைப்பழம்
சஞ்சரிகம் – வண்டு
சஞ்சீவகரணி – புளியம்பட்டை
சஞ்சீவகாசிகப்புல் – முசுறுப்புல்
சஞ்சீவகிமரம் – புளியமரம்
சஞ்சீவிப்பூடு – சதையொட்டிப்பூடு
சஞ்சீவிமூலிகை – உயிர்காப்பாற்றுமூலிகை
சஞ்சீவிமேதிக்கொடி – முடக்கத்தான்கொடி
சஞ்சுச்செடி – ஆமணக்குச்செடி
சடக்கேதனச்செடி – முள்ளங்கிச்செடி
சடக்கொதனம் – வசம்பு
சடங்கயச்சோளம் – வெண்முத்துச்சோளம்




