சித்த வைத்திய அகராதி 6251 – 6300 மூலிகைச் சரக்குகள்
சிவந்திகமரம் – நரிநவ்வல்மரம்
சிவந்திதப்பாலை – கொடிப்பாலை
சிவபீசமரம் – வெண்குங்கிலியம்
சிவப்பகத்தி – செவ்வகத்தி
சிவப்பாகாதிதக்கொடி – குண்டுமணிக்கொடி
சிவப்பம்மான் பச்சரிசி – சிறுசித்திரப்பாலாடைச் செடி
சிவப்பரிதாரம் – பொன்னாதாரம்
சிவப்பவரைக்கொடி – குங்குமவவரைக்கொடி
சிவப்பலிமரம் – செம்மரம்
சிவப்பாதளைச்செடி – சீமையாதளைச்செடி
சிவப்பாமணக்குச்செடி – செவ்வாமணக்குச்செடி
சிவப்பு அடுக்கலரிமரம் – குங்கும அடுக்கலரிமரம்
சிவப்புஅந்தி மல்லிகை – செவ்வந்திமந்தாரைச் செடி
சிவப்புஅரசழகாக் கொடி – செவ்வாம்பற்கொடி
சிவப்பு அரளி – செவ்வரளிச்செடி
சிவப்பு அரினக்காய் – சிவப்புக் கடுக்காய்
சிவப்பு அரைக்கீரை – செவ்வரைக்கீரை
சிவப்புஅலரிச்செடி – செவ்வரளிச்செடி
சிவப்பு அல்லிக்கொடி – செவ்வாம்பற்கொடி
சிவப்புக்கடலாரை – காட்டாரைக்கொடி
சிவப்புக்கடுக்காய் – அரோகிணிக் கடுக்காய்
சிவப்புக்கத்திரகப்பூடு – மதிமயக்கிப்பூடு
சிவப்புக்கந்திகம் – கோழித் தலைக்கந்தகம்
சிவப்புக்கந்திகாச்செடி – பூனைவணங்கிச்செடி
சிவப்புக்கழற்சிக்கொடி – செங்கழற்சிக்கொடி
சிவப்புக்கற்பூரம் – இரசக்கற்பூரம்
சிவப்புக்காசரளி – சிவப்புக் கல்லரளிச்செடி
சிவப்புக் காசிகாவரளி – சிவப்புக் காசரளிச்செடி
சிவப்புக்காசித்தும்பை – செங்காசித்தும்பைச்செடி
சிவப்புக்காதிப் பசளைக்கொடி – சிவப்புப்பசளைக்கொடி
சிவப்புக்கிச்செடி – சிவக்கரந்தைச்செடி
சிவப்புக்கிலுகிலுப்பை – செங்கிலுகிலுப்பைச்செடி
சிவப்புக்கிலோகிகைச்செடி – மயூரச்சிகைச்செடி
சிவப்புக்கீழாநெல்லி – செங்கீழாநெல்லிச்செடி
சிவப்புக்குமிட்டிக்கீரை – பவளக்குமிட்டிக்கீரை
சிவப்புக்கூத்தன்குதம்பை – குருதிக்கூத்தன் குதம்பை
சிவப்புக்கையான் தகரைச்செடி – செங்கையான்தகரைச்செடி
சிவப்புக்கொன்னைமரம் – செழுமலர்க்கொன்னைமரம்
சிவப்புச்சதுரக்கள்ளி – செஞ்சதுரக்கள்ளி
சிவப்புச்சத்திச் சாரணை – குங்குமச்சத்திச் சாரணைக்கொ
சிவப்புச்சந்தனமரம் – செஞ்சந்தனமரம்
சிவப்புச்சந்தானிகச்செடி – சிவப்புமாதளைச் செடி
சிவப்புச்சருக்கரை வள்ளி – பவளச்சருக்கரைவள்ளிக் கிழங்கு
சிவப்புச்சிங்கிராச் செடி – சிவப்புக் காசரளிச்செடி
சிவப்புச்சித்தகத்திமரம் – அரக்குச்சித்தகத்தி மரம்
சிவப்புச்சிந்தாரி – செங்கடுக்காய்
சிவப்புச்சிவதை -இரத்த சிவதை
சிவப்புச்சிற்றாமரைப் பூ – ரோஜாப்பூ
சிவப்புச்சீதா செங்கழுநீர் – குங்குமச்சீதாசெங்கழுநீற்கொடி
சிவப்புச்சீபிகக்கொடி – சிவப்புக் களற்சிக்கொடி




