HomeUncategorizedசித்த வைத்திய அகராதி 5551 - 5600 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய அகராதி 5551 – 5600 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய அகராதி 5551 – 5600 மூலிகைச் சரக்குகள்

சமுத்திரதாமரம் – மஞ்சளகில்மரம்
சமுத்திரதோயக்கொடி – முடக்கொடித்தான்கொடி
சமுத்திரநீருப்பு – கஞ்சியுப்பு – கரியுப்பு
சமுத்திரப்பாலாவி மரம் – கடம்பமரம்
சமுத்திரவுப்பு – கல்லுப்பு
சமுத்திரவூதியம் – கடல்நுரை
சமுத்திராத்தாழை – கடற்றாழை
சமுத்திராத்திரையம் – கடல்நுரை
சமுத்திராந்தகச்செடி – பருத்திச்செடி
சமுத்திராப்பகிரி – கடற்குருவி
சமுத்திராப்பழம் – கொந்தளம்பழம்
சமுத்திரார்த்தப்பூ – சிறுநாகப்பூ
சமுப்பவச்செடி – தைவேளைச்செடி
சமுற்பன்னமூலி – ஊசிப்பாலைக்கொடி
சம்பங்கிக்கொடி – கொடிச்சம்பங்கி
சம்பங்கிச்சேதனப்பூ – சம்பங்கிப்பூ
சம்பங்கிப்புல் – புற்சம்பங்கிப்பூ
சம்பங்குலிகச்செடி – விஷமூங்கிற்செடி
சம்பங்கோரை – சம்பைக்கோரை
சம்பணமேதிச்செடி – எருமைநாக்ச்செடி
சம்பரிவாளம் – நேர்வாளம்
சம்பவாகிகமரம் – எழுமுள்மரம்
சம்பழம் – எலுமிச்சம்பழம்
சம்பனசாரமரம் – ஏழிலைப்பாலைமரம்
சம்பாவரிசி – சம்பாநெல்லரிசி
சம்பாவாலுகி – வாலுளுவையரிசி
சம்பீரமரம் – எலுமிச்சைமரம்
சம்புச்சயனமரம் – திருவாத்திமரம்
சம்புநாவல்மரம் – நரிநவ்வல்மரம்
சம்புநீர் – கடல்நீர்
சம்புப்புல் – சம்பைப்புல்
சம்புப்பூகிக்காய் – வரிக்கடுக்காய்
சம்புமரம் – நாவல்மரம்
சம்புரோதக்கொடி – முள்ளுவெள்ளரிக்கொடி
சம்மியாகமரம் – கொன்றைமரம்
சம்மியாஞ்சிகமரம் – கடலழிஞ்சிமரம்
சயகாக்கொடி – ஆம்பற்கொடி
சயந்தகமரம் – புன்னைமரம்
சயந்திச்செடி – வாதமடக்கி செடி
சயனம் – புணர்ச்சி, படுக்கை
சயாகச்சசெடி – குறிஞ்சாச்செடி
சயிக்காரிமரம் – புரசமரம்
சயிக்கோளகச்செடி – கஸ்தூரியலரிச்செடி
சயிந்தவலவணம் – இந்துப்பு
சயிரேகமரம் – கருமருதோன்றிமரம்
சயிலகமரம் – வட்டவழுக்கைமரம்
சயிலகவுப்பு – வளையலுப்பு
சயிலங்கச்செடி – இருவேலிச்செடி
சயிலியுப்பு – வளையலுப்பு
சயினிகம் – திப்பிலி

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments