சித்த வைத்திய அகராதி 5651 – 5700 மூலிகைச் சரக்குகள்
சரோசக்கொடி – தாமரைக்கொடி
சரோசிகச்செடி – வாற்பூலாசெடி
சரோருகமலர் – தாமரைமலர்
சர்க்கயாமரம் – நச்சிலைச்கூமாமரம்
சர்ப்பராசிச்செடி – பிச்சுவிளாத்திச்செடி
சர்வவேதிகமரம் – வேங்கைமரம்
சலகண்டகிசேம்பு – நீர்ச்சேம்பு
சலகாகிச்செடி – சிவதைச்செடி
சலகாங்கக்கொடி – தாமரைக்கொடி
சலகாசமச் செடி – தொழுகண்ணிச்செடி
சலசப்பத்திரம் – தாமரையிலை
சலசப்பூ – தாமரைப்பூ
சலசப்பூரிதக்காய் – வரிக்கடுக்காய்
சலசனம் – தாமரை
சலந்திரட்டிக்கொடி – பெருங்கட்டுக்கொடி
சலபித்தீதம் – தீ, நெருப்பு
சலரசம் – உப்பு , கஞ்சியுப்பு
சலருகக்கொடி – தாமரைக்கொடி
சலவகத்திச்செடி – சீமையகத்திச்செடி
சலவகப்பிசின் – இலவம்பிசின்
சலவுகம் – ஆண்குறி , லிங்கம்
சலிகத்திப்பிலி – நறுக்குத்திப்பிலி
சலிகாச்சுண்டி – வரற்சுண்டிக்கொடி
சலினி – திப்பிலி
சலோகிதச்செடி – வயல்நெட்டிச்செடி
சலோற்சம் – குங்குலியம்
சல்லகாமிக்கொடி – வல்லாரைக்கொடி
சல்லகிகாச்செடி – தேட்கொடுக்குச்செடி
சல்லகிதாமரம் – விஷமருதமரம்
சல்லகிமரம் – இலவமரம்
சல்லியக்கரு – பிண்டக்கரு
சல்லியம் – யீடு
சல்லிவேர் – மாக்கொடி – நருஞ்சுக்கொடி
சவுட்டுமண்ணு – உவர்மண்
சவத்தினிட்டி – பிணஞ்சுடுகோல்
சவுரிக்கொடி – கொடியார்கூந்தல்
சவுரித்தாகிதமரம் – விருசமரம்
சவரிவீரிப்பழம் – குறட்டைப்பழம்
சவரேசமரம் – வெள்வாகைமரம்
சவிகச்செடி – விஷ்ணுகரந்தைச்செடி
சவிகற்பவக்கொடி – ஊதா அல்லிக்கொடி
சவுகந்தி – வசம்பு
சவுக்கிரியாச்செடி – எரிபூடுச்செடி
சவுக்குமரம் – சடாதரிமரம்
சவுங்காதிகமரம் – வெள்ளையகில்மரம்
சவுங்காதியுப்பு – பூநிருப்பு
சவுசயமரம் – முருங்கைமரம்
சவுசவியக்கிழங்கு – விப்பிருதழக்கிழங்கு
சவுண்டகம் – திப்பிலி
சவுண்டகவுப்பு – சவுட்டுப்பு




