சித்த வைத்திய அகராதி 5951 – 6000 மூலிகைச் சரக்குகள்
சாறதிப்படை – சிறுசெருப்படைக்கொடி
சாறுதாரிச்செடி – கையாந்தகரைச்செடி
சாறுவேலிகக்கொடி – சாரணைக்கொடி
சாறுவேளைச்செடி – தைவேளைச்செடி
சாற்காந்தன்மரம் – மலையாத்திமரம்
சானகாவிதச்செடி – சீதாசெங்கழுநீர்ச்செடி
சானகிச்சாரணை – வெள்ளைச்சாரணை
சானகிச்செடி – பொன்னாங்கண்ணிச்செடி
சானகிமரம் – மூங்கில்மரம்
சானக்கிமூலி – சாணாக்கீரை
சானக்கிமேனிச்செடி – குப்பைமேனிச்செடி
சானங்கிமரம் – மூங்கில்மரம்
சானசிச்செடி – பொன்னாவரைச்செடி
சானியக்கீரை – சிறுகீரை
சானியத்திரையம் – குரோசாணியோமம்
சானினிச்செடி – சேம்புச்செடி
சான்மலிப்பத்திரம் – வில்வப்பத்திரம்
சான்மலிமரம் – இலவமரம்
சான்மூலிகை – சிறுதேக்கு
சான்றோனின்செடி – சீமைச்செடி
சான்றோன்மூலிகை – கொடியெலுமிச்சைமரம்
சிகண்டிகைக்கொடி – கருங்குன்றிமணிச்செடி
சிகண்டிதச்செடி – சிற்றாமணக்குச்செடி
சிகத்திராமரம் – கடுக்காய்மரம்
சிகமதாகிகம் – அரத்தை
சிகமாததிகமரம் – கோங்கிலவமரம்
சிகரநீறு – பூநீறு
சிகரப்பாகிதமரம் – கோங்குமரம்
சிகரப்பாடிகம் – கோஷ்டம்
சிகரப்பூசிதமரம் – சந்தனமரம்
சிகரி – புல்லூரி
சிகரிதாமகமரம் – சந்தனமரம்
சிகரித்தேக்கு – சிறுதேக்கு
சிகரிநிம்பமரம் – மலைவேப்பமரம்
சிகரிமாதியமரம் – சரனைத்தேவதாரிமரம்
சிகரியந்தம் – புல்லூரி
சிகரியவிரை – அரைக்கீரைவிதை
சிகரியூமத்தைச்செடி – கருவூமத்தைச்செடி
சிகரெட்டுக்சுருள் – சிகரெட்டு
சிகரோசிதமரம் – இலச்சைகெட்டமரம்
சிகர்நாவிக்கிழங்கு – வெள்ளைநாவிக்கிழங்கு
சிகலோகமரம் – அகில்மரம்
சிகாண்டகமரம் – கொடுக்காப்புளிமரம்
சிகாவலம் – கொடிப்பாசி
சிகானவக்கிழங்கு – வெந்தோன்றிக்ழங்கு
சிகிக்காலடிப்பூண்டு – மயிற்காலடிப்பூண்டு
சிகிக்கிரிவதட – மயில்துத்தம்
சிகிடியாமரம் – கொட்டைமுந்திரிமரம்
சிகிப்பீலி – மயிலிறகு
சிகை – ரோமம்




