சித்த வைத்திய அகராதி 6301 – 6350 மூலிகைச் சரக்குகள்
சிவப்புச் சீமைப்பிச்சி – சீனப்பவளப்பிச்சிச்செடி
சிவப்புச்சூலிமரம் – செஞ்சூலிமரம்
சிவப்புச்சீரா செங்கழுநீர்செடி – செங்கழுநீற்செடி
சிவப்புச்செந்தொட்டி – செங்காஞ்சொறிச் செடி
சிவப்புச் செவ்வந்தி – குங்குமச்செவ்வந்திச் செடி
சிவப்புச் சோரிகம் – பவளமல்லிப்பூ
சிவப்புச்சோளம் – செஞ்சோளம்
சிவப்புத்தக்காளிச் செடி – செந்தக்காளிச்செடி
சிவப்புத்தட்டைப்பயறு – ரோசுத்தட்டைப்பயறு
சிவப்புதாளிக்கொடி – செந்தாளிக்கொடி
சிவப்புத்துளசி – செந்துளசிசெடி
சிவப்புத்தூபிதச் செடி – சிவப்புஅரளிச் செடி
சிவப்புநெய்ச்சிட்டிக்கீரை – பவளநெய்ச் சிட்டிக்கீரை
சிவப்புநெய்தற்பூ – செந்நெய்தற்பூ
சிவப்புப்பசளை – செம்பசளைக்கொடி
சிவப்புப்பரினிச்செடி – சிவப்புச்சித்தகத்திமரம்
சிவப்புப்புளியம் பிரண்டைக்கொடி – குங்குமப்புளியம்பிரண்டை
சிவப்புப்பூலிவிரை – பூலிவிரை
சிவப்புப்பொன்னாங்கண்ணி – ரோசுப்பொன்னாங்கண்ணி
சிவப்புமடற்தாழை – செந்தாழைமரம்
சிவப்புமணத்தக்காளி – செம்மண தக்காளிச்செடி
சிவப்புமத்திராச்செடி – செந்திராயச்செடி
சிவப்புமந்தாரை – செம்மந்தாரைமரம்
சிவப்புமருதோன்றி – செம்மருதோன்றிமரம்
சிவப்புமாதிகச்செடி – சீமைச்சிவப்புப்பிச்சிச்செடி
சிவப்பு முத்துச்சோளம் – செம்முத்துச்சோளம்
சிவப்புமுரதிகாப்புல் – தரகம்புல்
சிவப்புமுள் முருங்கை – முள்முருங்கைமரம்
சிவப்புமுள்ளங்கிக் கிழங்கு – செம்முள்ளங்கிக் கிழங்கு
சிவப்புமுள்ளதகிதமரம் – எழுமுள் மரம்
சிவப்புமுள்ளிக்கீரை – குப்பைமுள்ளிக்கீரை
சிவப்புமுன்னிகாமரம் – சிவப்புக் கொன்னைமரம்
சிவப்புமூக்கரைச்சாரணை – பவளமூக்காரைச் சாரனைக்கொடி
சிவப்புமொச்சிமரம் – செம்மொச்சிமரம்
சிவப்புரோஜா – அரக்குரோஜாச்செடி
சிவப்புலாசிகக்கொடி – ஆம்பற்கொடி
சிவப்புவட்டச் சாரணை – அரக்குவட்டச்சாரனைக் கொடி
சிவப்புவஸ்திரம் – சிவப்புப் பட்டுவேட்டி
சிவப்புவல்லிக்கொடி – சிவந்தவல்லிக்கொடி
சிவப்புவாசிக்கயர் – சிகைக்காய்
சிவப்பு வாடாமல்லிகை – பவளவாடாமல்லிகைச்செடி
சிவப்பெருக்கஞ்செடி – செவ்வெருக்குச்செடி
சிவப்பெலிச்செவிக்கீரை – பவளவெலிச்செவிக்கீரை
சிவப்போளகம் – சிவப்புப்போளம்
சிவமதுகச்செடி – சிறுபுள்ளடிச்செடி
சிவமல்லிகாப்பூண்டு – வெள்ளைவெங்காயப்பூண்டு
சிவமல்லிமரம் – கொக்குமந்தாரைமரம்
சிவமாகிதச்செடி – சிவகரந்தைச் செடி
சிவமாதிதமரம – மாமரம்
சிவமாதுகமரம் – வேப்பமரம்




