சித்த வைத்திய அகராதி 6401 – 6450 மூலிகைச் சரக்குகள்
சிறுகியக்கீரை – சிறுமுன்னைக்கீரை
சிறுகாகோளி – சீரகாகோளி
சிறுகாஞ்சகிக்செடி – சிறுகாஞ்சொரிச்செடி
சிறுக்காஞ்சொறி – சிறுசெந்தொட்டி
சிறுகாதிதக்கொடி – சவுரிக்கொடி
சிறுகாரிடக்காய் – சாதிக்காய்
சிறுகாலிகச்செடி – சித்திரப்பாலாடைச்செடி
சிறுகாளான் – பேய்க்காளான்
சிறுகாறகப்புல் – காவட்டம்புல்
சிறுகிராங்கிப்பூண்டு – சின்னவெழுத்தாணிப்பூண்டு
சிறுகிழங்கு – நீர்க்கிழங்கு
சிறுசீரகிக்கொடி – செண்பகக்கொடி
சிறுகீரை – சிறுக்கீரை
சிறுகுக்கல்மரம் – சுணங்கவிருட்சம்
சிறுகுமிழ் – செடிக்குமிழ்
சிறுகுரவமரம் – குராமரம்
சிறுகுரும்பை – தென்னங்குரும்பை
சிறுகுலிச்செடி – புளியாரைச்செடி
சிறுகுறிஞ்சகச்செடி – குறிஞ்சாச்செடி
சிறுகுறிஞ்சாச்செடி – சிறுசேவிகச்செடி
சிறுகுறிஞ்சாக்கீரை – புளியாரைக்கீரை
சிறுகைக்கொடி – கட்டுக்கொடி
சிறுகொடிமுந்திரி – கொடிமுந்திரி
சிறுகொச்சிமிளகாய் – கானல் மிளகாய்
சிறுகொத்தவரை – சீனியவரைக்காய்
சிறுகொய்யாமரம் – அமுத்தனிமரம்
சிறுகொன்னை – செடிக்கொன்னை
சிறுகோசினிச்செடி – நின்றுசினுங்கி
சிறுகோவை – செங்கோவை
சிறுகிலும்பான் – கோழிச்சிலும்பான்
சிறுசிவப்பம்மான் பச்சரிசி – சின்னசிவப்பம்மான்பச்சரிசிச்செடி
சிறுசின்னி – சின்னிச்செடி
சிறுசீபிகச்செடி – செந்தொட்டிச்செடி
சிறுசீரகம் – நரிச்சீரகம்
சிறுசுண்டைச்செடி – காமரேசிகச்செடி
சிறுசூலிமரம் – அகச்சூலிமரம்
சிறுசெண்பகக்கொடி – கொடிச் செண்பகம்
சிறுசெந்திராயக்கொடி – செந்திராயக்கொடி
சிறுசெந்தொட்டி – செந்தொட்டிச்செடி
சிறுசெம்பிகாச்செடி – சுவற்றுமுள்ளங்கிச்செடி
சிறுசெருப்படை – செருப்படைக்கொடி
சிறுசேவிகச்செடி -சிறுசீனியவரைச்செடி
சிறுதக்காளி – மிளகு தக்காளிச்செடி
சிறுதங்கரளிமரம் – பொடித்தங்கரளிமரம்
சிறுதிப்பிலி – திப்பிலி
சிறுதீபச்புல் – சோதிப்புல்
சிறுதுத்தி – கொடித்துத்தி
சிறுதுந்திகமுத்து – நீர்வெட்டிமுத்து
சிறுதும்பை – சிவதும்பைச்செடி
சிறுதெல்லு – குரவந்தெல்லுக்கொடி




