HomeUncategorizedசித்த வைத்திய அகராதி 651 - 700 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய அகராதி 651 – 700 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய அகராதி 651 – 700 மூலிகைச் சரக்குகள்

அம்பளாகைமரம் – அகத்திமரம்    
அம்பியம் – கள்ளு         
அம்புசம் – தாமரை         
அம்புசம்மாகிகம் – செடிக்காசரைக்கீரை     
அம்புசன்மக்கொடி – தாமரை  
அம்புசாகிதச்செடி – செடித்தம்பட்டையவரை    
அம்புசாதக்கொடி – கட்டுக்கொடி            
அம்புசேதிகச்செடி – செங்கொழுஞ்சிச்செடி      
அம்புதப்புல் – கோரைப்புல்              
அம்புநீர் – விந்துநீர்         
அம்புப்பிரசாதனம் – தேற்றாங் கொட்டை    
அம்புப்பிரசிகச்செடி – செங்கொள்ளுச்செடி   
அம்புயக்கொடி – தாமரைக்கொடி  
அம்புலிச்செடி – சந்திரகாந்தி  
அம்புவாகினிமரம் – எலுமிச்சை    
அம்புவியரசு – செடிப்பூவரசு             
அம்பைவேர் – வெட்டிவேர்    
அம்பொருந்தகரை – செந்தகரை    
அம்போருகக்கொடி – தாமரை    
அம்மச்சிமரம் – செந்தணக்குமரம்    
அம்மட்டிக்கிழங்கு – கொட்டிக்கிழங்கு      
அம்மாதிகச்செடி – செந்திரா   
அம்மான்பச்சரிசிச்செடி – சித்திரப் பாலாடை      
அம்மியபாவைச்செடி – செந்தாடு பாவைச்செடி   
அம்மிரமரம் – மாமரம்
அம்மிராமரம் – கெந்தாழைமரம்
அம்மிலவிருட்சம் – புளியமரம்
அம்மையார்கூந்தல் – சவுரி கொடி
அம்மைவேணிச்செடி – வெண் தகரைச்செடி
அம்மோனியாகப்பிசின் – சீமைப்பிசின்
அயகத்தினை – செந்தினை
அயகம் – வசம்பு
அயக்காந்தமரம் – வெண்தேவதாரிமரம்
அயக்காந்தம் – ஊசிக்காந்தம்
அயக்கிராமரம் – கானல்மரம்
அயதிப்பாலை – திருநாமப்பாலை
அயத்திராச்செடி – செந்துருக்கன்செடி
அயத்திற்குத் தாய் – கெந்தகம்
அயத்தீ – இரும்புத் தொட்டிப்பாஷாணம்
அயமரம் – செண்டாளிமரம்
அயமவாதி – வசம்பு
அயமி – வெண்கடுகு
அயமிராச்செடி – செந்தும்பை
அயம் – இரும்பு   
அயம்மியச்செடி – செந்துவரை
அயலி – வெண்கடுகு
அயவாரிக்கொடி – செந்நாகதாளிக்கொடி
அயவாரிதி – வசம்பு
அயவாருகச்செடி – நெந்நாயுருவி
அயவிகம் – சிற்றரத்தை

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments