சித்த வைத்திய அகராதி 601 – 650 மூலிகைச் சரக்குகள்
அமிர்தக்கொடி – சீந்திற்கொடி
அமிர்தசாமரம் – செஞ்சிந்தகத்தி
அமுக்கிராச்செடி – அசுவகந்தி
அமுங்காரக்கொடி – நெட்டி கொடி
அமுசகக்கொடி – செருப்படை
அமுதகரந்தை – சிவகரந்தை
அமுதக்காய் – கடுக்காய்
அமுதக்குவிகம் – செங்கற்றாழை
அமுதக்கொடி – சீந்திற்கொடி
அமுதக்கோணிகச்செடி – செங்கிழுவைச்செடி
அமுதங்கச்செடி – சதுரக்கள்ளி
அமுதசர்க்கரை – சீந்திற்சர்க்கரை
அமுதசாரமரம் – வெள்வேளா
அமுதசாரம் – தேன், கற்கண்டு
அமுதச்சேவிதம் – சிறுகுறிஞ்சா
அமுதச்சோகிதம் – செங்குமிழ்
அமுதகரம் – மஞ்சிட்டிவேர்
அமுதநீர் – பிண்டநீர், சூதகநீர்
அமுதமரம் – நெல்லிமரம்
அமுதவல்லிக்கொடி – சீந்திற்கொடி
அமுதவிந்து – வலைரசம்
அமுதாரிக்கொடி – பூனைக்காலி
அமுதமரம் – எலுமிச்சை
அமுத்தமரம் – நெல்லிமரம்
அமுரிநீர் – சிறுநீர்
அமுர்தபலக்கொடி – பேய்ப்புடல்
அமேதகம்நீக்கி – கற்றாழை
அமேத்தியமரம் – மூங்கில்மரம்
அமைச்சாகிதச்செடி – செங்குருந்தொட்டிச்செடி
அமைமரம் – கூந்தற்கமுகுமரம்
அமைமோனிச்செடி – செங்கொடுவேலிச்செடி
அமையப்புல் – இலாமிச்சைப்புல்
அமோகினிமரம் – பாதிரிமரம்
அம்பகக்கிழங்கு – சேம்பு கிழங்க
அம்பகாதிதம் – செங்கொட்டான்
அம்பகிப்பாளை – ஆடுதின்னாப்பாளைச் செடி
அம்பங்கியரிசி – விழாவரிசி
அம்பணமரம் – வாழைமரம்
அம்பாநேமிச்செடி – வெண்கிலுகிலுப்பைச்செடி
அம்பரை – நிமிளை
அம்பரைநாதம் – அப்பிரகம்
அம்பர் – சீமையம்பர்
அம்பலக்காணி – செங்கொய்யா
அம்பலக்காச்சி – வாதரக்காச்சி
அம்பலக்கோடகம் – கோடகசாலை
அம்பலத்திமரம் – தான்றிமரம்
அம்பலத்தோதிகச்செடி – செஞ்சதுரக்கள்ளி
அம்பல விருட்சம் – தில்லைமரம்
அம்பலவேகிச்செடி – செஞ்சூரன்
அம்பளங்காய் – சீனத்துக்காய்




