HomeUncategorizedசித்த வைத்திய அகராதி 6751 - 6800 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய அகராதி 6751 – 6800 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய அகராதி 6751 – 6800 மூலிகைச் சரக்குகள்

சுக்கிலம் – நாதம் – விந்து
சுக்கிலாகிகவுப்பு – கரியுப்பு
சுக்கு – வேர்க்கொம்பு
சுக்குநாறிப்புல் – வாசனைப்புல்
சுக்குநாறிப்பூடு – ரணநாயகச்செடி
சுக்குநாறிமரம் – சாலிமரம்
சுக்குப்பொடி – வேர்க்கொம்சூரணம்
சுக்குமஏலம் – சிற்றேலம்
சுக்குமியவரை – கொத்தவரைச்செடி
சுக்கைக்கொடி – மொசுமொசுக்கைக்கொடி
சுங்கதாரிமரம் – கொடுக்காப்புளிமரம்
சுங்கத்தாவியுப்பு – சவுட்டுப்பு
சுங்கம்பாளை – ஆடுதின்னாப்பாளை
சுங்கான்புகையிலை – சுரட்டுப்புகையிலை
சுங்கிமரம் – வன்னிமரம்
சுசிகக்கீரை – அமுதவல்லிக்கொடி
சுசியாவரைச்செடி – வெள்ளையாவரைச்செடி
சுச்சிகநவ்வல்மரம் – திப்பிலிநவ்வல்மரம்
சுடர் – சூடன்
சுடர்க்காரிப்பூச்சி – மின்மினிப்பூச்சி
சுடர்க்கொடி – சூடன்
சுடலையாவரை – இடுகாட்டவரைச்செடி
சுடலையூர்தி மரம் – கருமருதுமரம்
சுடற்காளை – சூடன்
சுடற்கொடியோன் – கற்பூரம் – வீரம்
சுடீரமரம் -பீநாறிமரம்
சுடுகாடுமீட்டான்கொடி – முடக்கத்தான்கொடி
சுடுகூத்தன்மரம் – கருப்பட்டிவாகைமரம்
சுடுசுளாத்தி – சுடுதுரத்திச்செடி
சுடுதுரட்டிச்செடி – சித்திரப்பா
சுடுதுரத்திச்செடி – சுடுசுளாத்திச்செடி
சுடுதொரட்டிச்செடி – சூரைமுள்ளிச்செடி
சுணங்கவிருட்சம் – நாய்க்குட்டிவிருட்சம்
சுணங்குக்கள்ளி – சதுரக்கள்ளி
சுணைப்புல் – சுனைக்கோரைப்புல்
சுண்டிகை – உண்ணாக்கு
சுண்டிச்செடி – தொட்டால்வாடிச்செடி
சுண்டிமேனகைக்கொடி – நீர்ச்சுண்டிக்கொடி
சுண்டைக்காய்ச்செடி – சுரசிகாச்செடி
சுண்ணவிரோதி – சவ்வீரம்
சுதகக்கொடி – நெருஞ்சிற்கொடி
சுதரிகரமரம் – சம்புநாவல்மரம்
சுதர்ச்சிக்கள்ளி – சதுரக்கள்ளி
சுத்தகங்கை – குடநீர் – அறுவகைச்செயநீர் – பூநீர்
சுத்தகைதவமரம் – பெருங்காயநாறிமரம்
சுத்தசலம் – பனிநீர் – சிறுநீற்திராவகம்
சுத்தசாமிகமரம் – திருவாத்திமரம்
சுத்தமுரி – சிற்றமுரி
சுத்தவாகிகமரம் – தங்கரளிமரம்
சுத்துருகிக்கொடி – கண்டங்கத்திரிக்கொடி

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments