HomeUncategorizedசித்த வைத்திய அகராதி 7051 - 7100 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய அகராதி 7051 – 7100 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய அகராதி 7051 – 7100 மூலிகைச் சரக்குகள்

சூடனிந்து – சூடன்செயநீர்
சூடனியரத்தை – சித்தரத்ததை
சூடன் – கற்பூரம் – சுடற்கொடியோன்
சூடாமணிக்கொடி – குன்றிமணிக்கொடி
சூடிச்சாரம் – நவச்சாரம்
சூதகநீர் – இந்திரகோபப்பூச்சிநீர்
சூதகப்புல் – தருப்பைப்புல்
சூதகமரம் – புளிமாமரம்
சூதகமலப்பூ – புளிமாம்பூ
சூதகமல்லிச்செடி – மல்லிகைச்செடி
சூதகம் – பெண்ணழுக்கு
சூதச்செப்பு – வீட்டுவிளக்கம்
சூதபாஷாணம் – ரசபாஷாணம்
சூதபாந்தவிச்செடி – தொழுகண்ணிச்செடி
சூதப்புள்ளடி – பெரும்புள்ளடி
சூதம் – ரசம் – சிவன்விந்து
சூதனமரம் – கோங்குமரம்
சூதாஞ்சனம் – நீலாஞ்சனம்
சூதுமாதவச்செடி – ஓரிதழ்த்தாமரைச்செடி
சூந்துயிலிச்செடி – சிலந்திநாயகச்செடி
சூபகாவவரை – பேய்த்தம் பட்டையவரைக்கொடி
சூபிகாப்பூண்டு – பாம்புகொல்லிப்பூண்டு
சூபியமரம் – பேய்த்தேற்றாமரம்
சூரகாசிதம் – கடலை – சிறுகடலை
சூரகாசியமரம் – சூழ்ந்துமரம்
சூரகாவளிச்செடி – சூரைமுள்ளிச்செடி
சூரடஞ்செடி – சூரஞ்செடி
சூரணக்கிழங்கு – கரணைக்கிழங்கு
சூரணச்சேபிதம் – நிலவாகைச்செடி
சூரணத்தண்டுக்கீரை – கரணைக்கிழங்குக்கீரை
சூரணமரம் – அனிச்சமரம்
சூரத்தாவரை – பேதியாகுஞ்செடி
சூரத்தாவிரை – சூரத்தாவரைச்செடி
சூரத்துநிலவவுரி -அவுரிச்செடி
சூரத்துநிலவாகை – நிலவாகைச்செடி
சூரத்துநிலவேம்பு – நிலவேம்புச்செடி
சூரத்துநிலாவகம் – சூரத்தாவரைச்செடி
சூரத்துநிலாவரை – சூரத்துநிலவாகைச்செடி
சூரநாசனிமரம் – மஞ்சிட்டிமரம்
சூரற்கொடி – பிரம்புக்கொடி
சூரன்காய் – மாங்காய்
சூரன்பழம் – மாம்பழம்
சூரன்பாஷாணம் – கொச்சிவீரம்
சூராதிச்செடி – அழுகண்ணிசெடி
சூரியகாந்திச்செடி – பொழுதுவணங்கிச்செடி
சூரியதாபிதமரம் – பேரிக்காய்மரம்
சூரியன்செடி – செவ்வெருக்குச்செடி
சூரியன்விந்து – வாலைரசம்
சூருமகந்தப்புல் – கருப்பைப்புல்
சூரேசக்கொடி – பேய்ப்புடற்கொடி

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments