HomeUncategorizedசித்த வைத்திய அகராதி 7101 - 7150 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய அகராதி 7101 – 7150 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய அகராதி 7101 – 7150 மூலிகைச் சரக்குகள்

சூரைச்செடி – சூரஞ்செடி
சூரைமான்கண்ணி – பொன்னாங்கண்ணிச்செடி
சூரைமுள்ளிசெடி – சூரைச்செடி
சூர்ணபாலிக்கொடி – வரிக்குமிட்டிக்கொடி
சூர்ப்பிராமரம் – கூட்டப்பிராமரம்
சூர்ப்புகாக்கொடி -கழற்சிக்கொடி
சூர்மிளகு – வால்மிளகு
சூலிக்கள்ளி – சதுரக்கள்ளி
சூலிமரம் – அகச்சூலிமரம்
சூலியாக்கொடி – பிள்ளைத்தாட்சிக் கொடி
சூலினியிலை – வெற்றிலை
சூலேதமரம் – புன்னைமரம்
சூழகச்செடி – கடலைச்செடி
சூழவரினிக்கொடி – பொற்சீந்திற்கொடி
சூழ்ந்துமரம் – பரினிமரம்
சூழ்ப்பிராய்மரம் – சினாசிகாமரம்
செககவுரிச்செடி – கற்சூரஞ்செடி
செகராஜமரம் – தென்னைமரம்
செகரிகச்செடி – நாயுருவிச்செடி
செகவீரம் – கொச்சிவீரம்
செங்கடம்பு – சிவப்புக்கடம்புமரம்
செங்கடியுப்பு – வெடியுப்பு
செங்கடுகு – கடுகு
செங்கடுக்காய் – சிவப்புக்கடுக்காய்
செங்கடுக்காய் நீர் – ஐங்காயநீர், பிண்டநீர்
செங்கண்டங்கத்திரி – கண்டங்கத்திரி
செங்கண்ணிச்செடி – பொன்னாங்கண்ணிச் செடி
செங்கத்தாரிப்பட்டை – சுருளுப்பட்டை
செங்கத்தாழை – சிவப்புக்கற்றாழை
செங்கத்திரி – சிவப்புக்கத்திரி
செங்கதிர்ச்செடி – கதிர்ப்பச்சைச்செடி
செங்கமலம் – தாமரைப்பூ
செங்கமலைச்செடி – துளசிச்செடி
செங்கரந்தைச்செடி – சிவப்புக்கரந்தைச்செடி
செங்கரிப்பலாமரம் – வேர்ப்பலாமரம்
செங்கரிப்பான் – சிவப்புக் கரிப்பான்
செங்கருங்காலிமரம் – சிவப்புக்கருங்காலிமரம்
செங்கரும்பின்ரசம் – கரும்புச்சாறு
செங்கரும்பு – இரஸ்தாளிக்கரும்புத் தட்டை
செங்கழுநீர்ப்பூ – தேவபூஜைப்பூ
செங்களைப்பாஷாணம் – குதிரைப்பற்பாஷாணம்
செங்கற்றாழை – சிவப்புக் கற்றாழை
செங்காசநீர் – ஐங்காயநீர்
செங்காஞ்சொறி – சிவப்புச் செந்தொட்டி
செங்கிலுவைமரம் – சிவப்புக்கிலுவைமரம்
செங்கிறா விருட்சம் – உதிரவேங்கைமரம்
செங்கீரைத்தண்டு – சிவப்புக்கீரைத்தண்டுச்செடி
செங்குதாமரம் – செவ்வகத்திமரம்
செங்குமிழ்மரம் – சிவப்புக்குமிழ்மரம்
செங்குமுகிப்பாஷாணம் – சிவப்புத்தொட்டிப்பாஷாணம்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments