HomeUncategorizedசித்த வைத்திய அகராதி 8101 - 8150 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய அகராதி 8101 – 8150 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய அகராதி 8101 – 8150 மூலிகைச் சரக்குகள்

தீர்க்கபிப்பூடு – பாம்புக்கொல்லிப்பூடு
தீர்க்கமூலக்கொடி – முடக்கொத்தான்கொடி
தீர்க்கமேதிவிருட்சம் – கனையெருமைவிருட்சம்
தீர்க்கலோகிதப் புல் – தர்ப்பைப்புல்
தீர்ககலறுகு – யானையறுகு
தீர்க்கவிருக்கம் – பெருமரம்
தீவிரகந்தம் – துளசிச்செடி
தீனிப்பைக்கு வலுவைக் குறைக்குமூலிகைகள் – கிழங்குகள், இலந்தைப்
பழம், ஆளிவிரை, வெண்பூசனிக்காய்விரை, தேங்காய்ப்பால்,
எள்ளு, வடிகஞ்சி, வெந்நீர், இனிப்புப்பலகாரங்கள்
தீனிப்பைக்கு வலுவைக் கொடுக்குமூலிகைகள் – நெல்லிக்காய்,
மாதுளம்விரை, லவங்கம், ரோஜாப்பூ, ஏலக்காய், மிளகு
தீன்புச்செடி – சங்சங்குப்பிசெடி
துகிலின்பீசவிதை – பருத்திவிதை
துகுற்சிதச்செடி – நறுவீழிச்செடி
துசகக்கொடி – கொம்மட்டிக்கொடி
துசகதாதிதச்செடி – குடைமல்லிகைச்செடி
துசகமாதளை – கொம்மட்டிமாதளைச் செடி
துசக்கார மூலி – சிறியாணங்கைச்செடி
துசம் – குங்கிலியம்
துசாகதக்கொடி – குமிட்டிக்காய்க்கொடி
துசாகதீதமரம் – மாதளைமரம்
துசிசாலக்கொடி – பிரண்டைக்கொடி
துச்சிதச்செடி – ஆமணக்குச்செடி
துச்சிமமரம் – மயிர்க் கொன்னைமரம்
துடக்கறுப்பான்கொடி – முடக்கத்தான்கொடி
துடங்கணம் – வெண்காரம்
துடரிக்கொடி – தொடரிக்கொடி
துடர்க்கச்செடி – நரிவழுக்கைச்செடி
துடிகாச்செடி – தும்பைச்செடி
துடிகாதீதக்கள்ளி – குதிரைச்செவிக்கள்ளி
துடிச்சேவிகச்செடி – இசங்குச்செடி
துடிச்சோபிதமரம் – அகில்மரம்
துடிமாலிகக்கொடி – கொடியாவரைக்கொடி
துடியாஞ்சிகச்செடி – இசங்குச்செடி
துடியிகமரம் – நவரைவாழைமரம்
துடைக்கனமரம் – மூங்கில்மரம்
துடைச்சவச்செடி – எருக்குச்செடி
துணவுமரம் – தணக்குமரம்
துண்டிகை – கொப்பூழ்
துத்தகைக்கொடி – நாய்ப்பாகற்கொடி
துத்தநாகப்புல் – பெருநாதம்
துத்தபாஷாணம் – இரசிதபாஷாணம்
துத்தபேனச்செடி – நுரையிண்டஞ்செடி
துத்தமப்புல் – நாணற்புல்
துத்தமப்பூவிதம் – கொடியூமத்தை
துத்தமனாப்புல் – முயற்புல்
துத்திச்செடி – மஞ்சட்துத்திச்செடி
துத்திநீர் – சிறுநீர்
துத்தூரச்செடி – ஊமத்தைச்செடி

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments