சித்த வைத்திய அகராதி 8151 – 8200 மூலிகைச் சரக்குகள்
துந்தி – வயிறு – அடிவயிறு
துப்பா – தேன் – கொம்புத்தேன்
துப்பிரதாரிக்கொடி – நீர்ப்பாசிக்கொடி
தும்பகச்செடி – தும்பைச்செடி
தும்பசிச்சாரம் – தும்பராஷ்டகம்
தும்பரமரம் – அத்திமரம்
தும்பரமலினிக்கொடி – குதிரைக்குளம்படிக்கொடி
தும்பரமல்லிகை – அந்திமல்லிகைச்செடி
தும்பராக்கோதுமை – காட்டுக்கோதுமை
தும்பராஷ்டகம் – பேரரத்தை
தும்பராஞ்சிகைக்செடி – எருமுட்டைப்பீநாறிச்செடி
தும்பலிச்செடி – சீனத்துச்செடி
தும்பாகிகமரம் – ஆலமரம்
தும்பாலைக்கொடி – சுரைக்கொடி
தும்பாவகக்கொட்டை – காப்பிக்கொட்டை
தும்பிச்செடி – சிறுதும்பைச்செடி
தும்பிலிமுத்து – நீர்வெட்டிமுத்து
தும்புக்கொடி – கொத்தான்கொடி
தும்புசத்தட்டை – கரும்புத்தட்டை
தும்புசவேம்பு – சருக்கரைவேம்புமரம்
தும்புராசிகக்கொடி – சவுரிகொடி
தும்புராஷ்டகம் – பெருஞ்சித்தரத்தை
தும்புருமரம் – வெண்சூலிமரம்
தும்புலாமரம் – விஷத்தும்புலாமரம்
தும்புலிப்பாகு – சருக்கரை
தும்பைச்செடி – பெருந்தும்பைச்செடி
தும்மட்டிகாச் செடி – கடலாமணக்குச்செடி
தும்மட்டிக்கொடி – சிறுகும்மட்டிக்கொடி
தும்முகாம்புல் – காவட்டம்புல்
தும்முட்டிகமரம் – பேரிச்சமரம்
துயிலிக்கீரை – தொயிலிக்கீரை
துயில்காணாச்செடி – நெட்டி
துய்த்தல் – சாப்பிடல், உண்ணல்
துய்யான் – வெள்ளி
துரகதப்பூரக்கொடி – கற்பூரவெற்றிலைக்கொடி
துரகதமூலச்செடி – நீர்முள்ளிச்செடி
துரங்கப்பேரரிசி – குதிரை வாலியரிசி
துரங்கியவரிசி – கோதுமையரிசி
துரமிக்கொடி – தூதுளைக்கொடி
துரவிச்செடி – சேம்புச்செடி
துராயிலைப்பூண்டு – திராயிலைப்பூண்டு
துராயூகரிசி – பச்சரிசி
துராரோகமரம் – பனைமரம்
துராலகச்செடி – சன்னிநாயகச்செடி
துராலபச்செடி – சிறுகாஞ்சொறிச்செடி
துராலகமாதிச்செடி – செந்தொட்டிச்செடி
துரிஞ்சல்மரம் – உசில்மரம்
துரியத்தானக்கொடி – நாபிக்கொடி, கொப்பூழ்கொடி
துருக்கம் – குந்திரிக்கம்
துருக்கரமரம் – கஸ்தூரிநாறிமரம்




