சித்த வைத்திய அகராதி 8351 – 8400 மூலிகைச் சரக்குகள்
தேகணி – மஞ்சள்
தேகராஜிகச்செடி – கரிப்பான்செடி
தேகிகச்செடி – புல்லூரிச்செடி
தேக்கிவிமரம் – மொச்சிமரம்
தேக்குமரம் – பெருந்தேக்குமரம்
தேக்கோமகச்செடி – பொற்றலைக்கரிப்பான் செடி
தேங்காய் – முக்கண்ணன்காய்
தேங்காய்ப்பூண்டு – அரிசிப்பூண்டு
தேங்காலிகமரம் – சருக்கரைக்கொழுமிச்சைமரம்
தேங்கிட்டிச்செடி – தேட்கொடுக்குச்செடி
தேசகிமரம் – மூங்கில்மரம்
தேசணி – மஞ்சள்
தேசிக்காய் – எலுமிச்சங்காய்
தேசிப்பால் – எலுமிச்சம்பழரசம்
தேசிமரம் – எலுமிச்சைமரம்
தேசோமரம் – நெல்லிமரம்
தேட்கொடுக்குச்செடி – சிறுதேட்கொடுக்குச்செடி
தேட்டுக்கனிகிகம் – தேசாவரம்
தேத்தாமரம் – தேற்றாமரம்
தேநசமரம் – மூங்கில்மரம்
தேமாமரம் – இனிப்புமாமரம்
தேம்பாகமரம் – தேன் தொடைமரம்
தேயிலைச்செடி – கொழுந்திலைச்செடி
தேயுசாரம் – தேசாவரம்
தேர்ப்பூண்டு – காரம், பூநீறு
தேலிக்கோசனமரம் – நரிக்கொன்னைமரம்
தேவகந்தகம் – குங்கிலியம்
தேவகெந்திதம் – சாம்பிராணி
தேவதரு – கற்பகத்தரு
தேவதாமிகக்கீரை – செம்புளிச்சக்கீரைச்செடி
தேவதாமுகிக்கிழங்கு – சருக்கரைவள்ளிக் கிழங்க
தேவதாரிமரம் – தேவதாருமரம்
தேவதாருமரம் – வண்டுகொல்லிமரம்
தேவதாவிக்காய் – சாதிக்காய்
தேவதாளிசக்கொடி – பேய்ப்பீhக்குக்கொடி
தேவதூபம் – சாம்பிராணி
தேவபூஜைப்பூ – செங்கழுநீர்ப்பூ
தேவபூதிமரம் – தில்லைமரம்
தேவமரம் – அனிச்சைமரம்
தேவமாதிக்கற்றாழை – நாகபடக்கற்றாழை
தேவவகைச்செடி – அடுக்குமல்லிகைச்செடி
தேவலிமரம் – புன்னைமரம்
தேவவிருட்சம் – கற்பகவிருட்சம்
தேவாங்கோலச்செடி – நாறாகரந்தைச்செடி
தேவாபேட்சையிலை – வெற்றிலை
தேவாமுதம் – சுழிமுனையமுதம்
தேவிகந்தம் – கெந்தகம்
தேவிகமரம் – பூம்பாதிரிமரம்
தேவிசாரணை – சத்திச்சாரணை
தேவிமூலச்செடி – சிறுபூளைச்செடி




