சித்த வைத்திய அகராதி 8651 – 8700 மூலிகைச் சரக்குகள்
நவகசாரக்கொடி – சாரணைகொடி
நவஞ்சச்செடி – அசமதாகச்செடி
நவதாளகமரம் – சருக்கரைப்புளிமரம்
நவநீதம் – வெண்ணெய்
நவபல்லவச்செடி – சிலையாமணக்குச்செடி
நவரைவாழை – மகரவாழை
நவரோதயகற்கண்டு – சீனிக்கற்கண்டு
நவலோகம் – தங்கம், செம்பு, வெள்ளி, வங்கம், கருவங்கம்,
நாகம், அயம், வெங்கலம், பித்தளை
நவுகாமரம் – நவுகுமரம்
நவுகுமரம் – கருமுருகிமரம்
நவூரியமரம் – செஞ்சித்தகத்தி
நவ்வல்மரம் – இனிப்புநவ்வல்மரம்
நவ்வூகிதக்கற்றாழை – வரிக்கற்றாழை
நளகிக்கொடி – தாமரைக்கொடி
நளகுகாவவரை – சீனிக்கொத்தவரைச்செடி
நளத்தமாஞ்சில் – சடாமாஞ்சில்
நளிர் – நண்டு – தலையிலான்
நளினப்பூ – தாமரைப்பூ
நளினவிருட்சம் – முண்டகவிருட்சம்
நறவிகாமரம் – அனிச்சமரம்
நறவு – தேன் – அமுதம்
நறவுசாரம் – குங்குமம்
நறளை – பெருநறளை
நறுக்குமூலம் – கண்டத்திப்பிலி
நறுங்கரந்தை – நாறுகரந்தைசெடி
நறுந்தாளிக்கொடி – தாளிக்கொடி
நறுந்திகாப்புல் – சுக்குநாறிப்புல்
நறுந்தேன் – கொம்புத்தேன்
நறுமகாசீரம் – நச்சீரகம்
நறுமணத்தக்காளிச்செடி – மணத்தக்காளிச்செடி
நறுமணம் – நல்லவாசனை
நறுமுருங்கை – முருங்கைமரம்
நறுமுலிகாமரம் – சுரபுன்னைமரம்
நறுமுதிரச்செடி – வனமிரட்டிசெடி
நறுமுன்னைமரம் – முன்னைமரம்
நறுவிளிமரம் – விருசமரம்
நறைமாறிமரம் – கருநெல்லிமரம்
நற்சீரகம் – கறிச்சீரகம்
நற்சேவகன்கிழங்கு – கோடங்கிழங்கு
நற்பலாமரம் – வேர்ப்பலா
நற்பிரியம் – பற்படாகம்
நற்பீடகமரம் – வாதாங்கொட்டைமரம்
நற்பீர்க்கங்கொடி – பீர்க்கங்கொடி
நற்றுளசி – சிவதுளசி
நற்றுளிப்பிசின் – அத்திப்பிசின்
நனந்தமரம் – புங்குமரம்
நனைந்தவக்கொடி – சிறுகட்டுக் கொடி
நண்பனாச்செடி – சணற்செடி
நன்மாலவமரம் – விடமருதுமரம்




