சித்த வைத்திய அகராதி 8851 – 8900 மூலிகைச் சரக்குகள்
நானகுலிமரம் – முன்னைமரம்
நானாங்கள்ளி – இலைக்கள்ளி
நானாவிதச்செடி – வேப்பிலைநங்கைச்செடி
நான்முகப்புல் – சதுரப்பட்டைப்புல்
நான்முகன்தேவி – மனோசிலை
நிகடை – உருக்குங்குகை
நிகண்டகச்செடி – கடலைச்செடி
நிகாசகக்கொடி – வெள்ளாம்பற்கொடி
நிகாநயச்செடி – சந்திரகாந்திச்செடி
நிகாவரிச்செடி – பிரமிச்செடி
நிகுஞ்சரப்புல் – சுக்குநாறிப்புல்
நிகும்பவாளம் – நேர்வாளம்
நிகேசரப்புல் – சமபங்கிப்புல்
நிக்குரோதச்செடி – காட்டாமணக்குச்செடி
நிசாகசமரம் – மகிழமரம்
நிசாகசிக்கொடி – தாமரைக்கொடி
நிசாகரககீரை – கோழிக்கீரை
நிசாடுகம் – மஞ்சள்
நிசாபதி – கற்பூரம்
நிசதபிகமஞ்சள் – மரமஞ்சள்
நிசாபிகாரிப்பூ – சிற்றாமரைப்பூ
நிசாபுட்பம் – செவ்வாம்பற்பூ
நிசாமணிச்செடி – சந்திரகாந்திச்செடி
நிசிகம் – மஞ்சள்
நிசிதாவிமரம் – நீர்க்கடம்புமரம்
நிசோதகச்செடி – செஞ்சிவதைச்செடி
நிச்சடக்கொடி – காளிக்கொடி
நிச்சதக்கீரை – செடிக்காசரைக்ரை
நிச்சியப்பூடு – வெள்ளைப்பூடு
நிட்பவப்பயறு – மொச்சைபயறு
நிணச்சாயமரம் – சாயாவிருட்சம்
நிக்காரிச்செடி – நீர்முள்ளிச்செடி
நிதத்துரப்புல் – சோனைப்புல்
நிதிந்தக்கொடி – கண்டங்கத்திரிக்கொடி
நிதியவமரம் – சிறுதேக்குமரம்
நித்தக்கத்திரிச்செடி – தினக்கத்திரிச்செடி
நித்தியகல்யாணிச்செடி – வாடாமல்லிகைச்செடி
நித்திரகாசச்செடி – நொச்சிசெடி
நித்திரகாரிச்செடி – கஞ்சாச்செடி
நித்திரவரிக்கொடி – கண்டங்கத்திரிக்கொடி
நித்திராவிச்செடி – ஊமத்தைச்செடி
நிம்பதேசிக்கொடி – முடக்கத்தான்கொடி
நிம்பப்பட்டை – வேப்பம்பட்டை
நிம்பப்பழம் – எலுமிச்சம்பழம்
நிம்பப்பாசி – வேப்பம்பாசி
நிம்பப்பாசிகச்சாறு – எலுமிச்சம்பழச்சாறு
நிம்பப்பூ – வேப்பம்பூ
நிம்பமரம் – வேப்பமரம்
நிம்பமேற்புல்லுருவி – வேம்பின்மேற்புல்லுருவி
நிம்பமோலிப்பட்டை – வேப்பம்பட்டை




