சித்த வைத்திய அகராதி 8801 – 8850 மூலிகைச் சரக்குகள்
நாய்ப்புடோல் – பேய்ப்புடோல்
நாய்ப்புல் – சுணங்கப்புல்
நாய்வணங்கிச்செடி – நாயுருவிச்செடி
நாய்வேம்பு – சிறுவேம்பு
நாய்வேலிச்செடி – தைவயலிச்செடி
நாய்வேளைச்செடி – நாய்க்கடுகுச்செடி
நாரங்கசீகம் – சித்தாமுட்டிச்செடி
நாரங்கமரம் – நாரத்தைமரம்
நாரணன்செடி – விஷ்ணுகரந்தைச்செடி
நாரத்தைமரம் – புளிப்புநாரத்தைமரம்
நாராயணக்கீரை – செம்புளிச்சங்கீரை
நாராயணிமரம் – அரசமரம்
நாராயணீயம் – கருவங்கம்
நாரிகாமணக்குச்செடி – சிற்றாமணக்குச்செடி
நாரிகேளிமரம் – தென்னைமரம்
நாரிசிச்செடி – பேய்த்துவரைச்செடி
நாரிண்டு – நுரையிண்டுக்கொடி
நாரிமூலம் – நன்னாரிவேர்
நாரைமரம் – வெண்ணாரைமரம்
நாலிப்பூ – கார்த்திகைப்பூ
நாவிலைப்பைரவிக்கொடி – சதையொட்டிக்கொடி
நால்வாசகிச்செடி – சிறுவிழுதிச்செடி
நாவல்மரம் – நவ்வல்மரம்
நாவாசீகமரம் – சிற்றொடுவைமரம்
நாவிகாக்கிழங்கு – கலப்பைக்கிழங்கு
நாவிகாக்குவளை – செங்குவளைக்கொடி
நாவிகாச்சங்குச்செடி – பீநாறிச்சங்கஞ்செடி
நாவிகீப்புல் – கஸ்தூரிநாறிப்புல்
நாவியப்பூ – கார்த்திகைப்பூ
நாளகவேர் – விலாமிச்சைவேர்
நாளகிமரம் – சூழ்ந்துமரம்
நாளத்தி – ஊதுதுருத்தி
நாளத்தீகதம் – இரட்டைபுதுதுருத்தி
நாளம் – சரவுளை
நாளயச்செடி – சின்னம்மான் பச்சரிசிச்செடி
நாளிகச்செடி – வள்ளைச்செடி
நாளிகாக்கோரை – சுனைக்கோரை
நாளிகோளமரம் – தென்னைமரம்
நாளிமியாவரை – சூரத்தாவரை
நாளினிமரம் – புளிமாமரம்
நாறாகரந்தை – சிவகரந்தைச்செடி
நாறுகமரம் – பெருங்காயப்பால்மரம்
நாறுகரந்தை – கொட்டைக்கரந்தைச்செடி
நாறுகாநீரு – சிறுநீர், அமுரிநீர்
நாறும்பூ – கெந்தகம்
நாற்காலிப்பூண்டு – எருமைநாக்கிப்பூண்டு
நாற்கிழங்கு – மருட்கிழங்கு
நாற்கோணக்கொடி – வெள்ளைவட்டச்சாரணை
நாற்றம் – வசம்பு
கெந்தகம் – நாளகம்




