HomeUncategorizedசித்த வைத்திய அகராதி 8951 - 9000 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய அகராதி 8951 – 9000 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய அகராதி 8951 – 9000 மூலிகைச் சரக்குகள்

நிழற்காந்தவிருட்சம் – சாயா விருட்சம்
நிழனாவல்மரம் – கருநவ்வல்மரம்
நின்றாற்சிணுங்கி – நின்றுசிணுங்கி
நின்றிகாவேலம் – சிற்றேலம்
நின்றிடந்தீஞ்சான் – மல்லைப்பூடு
நின்றிதப்பசலி – தரைப்பசலிக்கொடி
நின்றுசிணுங்கிச்செடி – நின்றாற்சிணுங்கிச்செடி
நின்றோசிக்கற்றாழை – நாகபடக்கற்றாழை
நீட்டக்கத்திரி – கொடிக்கத்திரி
நீட்டக்காவிதக்காய் – சுரைக்காய்
நீட்டக்கொத்தவரை – பெருங்கொத்தவரைச்செடி
நீட்டப்பாகல் – கொம்பன்பாகல்
நீட்டாகலமரம் – பம்பளிமாகமரம்
நீட்டினவிரல் குறித்தான் செடி – கிரந்திநாயகச் செடி
நீட்டுக்காற்செடி – முடவாட்டுக் காற்செடி
நீத்தங்கிழங்கு – தண்ணீர் விட்டான் கிழங்கு
நீத்திருணி – காமப்பால்
நீபமரம் – வெண்கடம்பமரம்
நீம்பயப்பூடு – பனிதாங்கிப்பூடு
நீரடிமுத்து – நீர்வெட்டிமுத்து
நீரடைக்கொடி – பன்றிப்புடற்கொடி
நீராளிச்செடி – ஆற்றலரிச்செடி
நீராகாசிதப்புல் – நான்முகப்புல்
நீராகாரம் – அன்னாகாரம்
நீராகாரிக்கொடி – பாலாட்டங்கொடி
நீராரைக்கீரை – ஆரைக்கீரை
நீராவியமரம் – பாற்கடுக்காய் மரம்
நீரிண்டங்கொடி – நுரையிண்டங்கொடி
நீரிலாத்தாமரை – கற்றாமரை
நீருண்டிவேர் – தண்ணீர்விட்டான் கிழங்கு
நீருள்ளி – வெண்காயம்
நீரொருகக்கொடி – தாமரைக்கொடி
நீர்க்கடம்பு – நிலக்கடம்புச்செடி
நீர்க்கடலை – பேய்க்கடலைச்செடி
நீர்க்கட்டுக்கொடி – பெருங்கட்டுக்கொடி
நீர்க்கண்டகிச் செடி – நீர்முள்ளிச்செடி
நீர்க்கிழங்கு – சிறுகிழங்கு
நீர்க்குடத்திக் கிழங்கு – தண்ணீர்விட்டான்கிழங்கு
நீர்க்குண்டிச்செடி – வெண்நொச்சிச்செடி
நீர்க்குத்திரக்கொடி – நீர்ச்சுண்டிக்கொடி
நீர்க்கும்பிச்செடி – நீர்முள்ளிச்செடி
நீர்க்குவளைக்கொடி – நீலோற்பலக்கொடி
நீர்க்குளிரிச்சசெடி – குளிரிச்செடி
நீர்க்குறிஞ்சாக்கொடி – வெண்குறிஞ்சாக்கொடி
நீர்ச்சுண்டிக்கொடி – நெட்டிக்கொடி
நீhச்சூசமுத்து – நீர்வெட்டிமுத்து
நீர்ச்சேம்பு – சேம்புச்செடி
நீர்ச்சோனப்பிரமி – நீர்ப்பிரமி
நீத்தாளி – தாளிக்கொடி
நீர்நிதித்தாமரை – செந்தாமரை

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments