சித்த வைத்திய அகராதி 9001 – 9050 மூலிகைச் சரக்குகள்
நீர்நொச்சிச்செடி – நொச்சிச்செடி
நீர்ப்பச்சைக்கொடி – கடலாரைக் கொடி
நீர்ப்பட்டை – பிசின்பட்டை
நீர்ப்பந்திக்கொடி – கட்டுக்கொடி
நீர்ப்பயறு – மின்னிப்பயறு
நீர்ப்பரிசகம் – ஆமை
நீர்ப்பனைக்கிழங்கு – நிலப்பனைக்கிழங்கு
நீர்ப்பனைச்செடி – புல்லாமணக்குச்செடி
நீர்ப்பாசி – தண்ணீர்பாசி
நீர்ப்பாடிக்கீரை – நீராரைக்கீரை
நீர்ப்பூலா – வாற்பூலாச்செடி
நீர்மீட்டான் கிழங்கு – தண்ணீர்மீட்டான் கிழங்கு
நீர்முள்ளிச்செடி – சிவப்புநீர்முள்ளிச் செடி
நீர்மூலக்கிழங்கு – தண்ணீர்விட்டான்கிழங்கு
நீர்மேல்நெருப்பு – நீர்நெருப்புச்செடி
நீர்வஞ்சிக்கொடி – பிரம்புக்கொடி
நீhவல்லிக் கிழங்கு – தண்ணீர்விட்டான் கிழங்கு
நீர்வல்லிக்கொடி – மலைவல்லிக் கொடி
நீர்வல்லியிலை – வெற்றிலை
நீர்வாசிக்கொடி – நீர்ப்பாசிக்கொடி
நீர்விளா – குட்டிவிளாச்செடி
நீர்வெட்டிமுத்து – நீரடிமுத்து
நீர்வேணிப்பாசி – கடற்பாசி
நீலகண்டனிலை – வெற்றிலை
நீலகண்டன் – துருசு
நீலக்கொடி – கருங்குவளைக்கொடி
நீலசம்புமரம் – நாவல்மரம்
நீரஞ்சோதி – சோதிவிருட்சம்
நீலதரு – தெங்குமரம்
நீலத்தாமரை – மேகநிறத் தாமரை
நீலத்தூரிச்செடி – கருவூமத்தைச்செடி
நீலபதூமம் – நீலோற்பலக்கொடி
நீலபுட்பச்செடி – விஷ்ணுகரந்தைச்செடி
நீலபுட்பச்சேவிதம் – கண்டங்கத்திரிக்கொடி
நீலபுட்பிகைச்செடி – நொச்சிச்செடி
நீலப்பிரமி – பிரமி
நீலமணிமரம் – பனைமரம்
நீலமார்க்கச்செடி – கையாந்தகரைச்செடி
நீலமாலிகச்செடி – விஷ்ணுகரந்தைச்செடி
நீலவர்ண அந்திமல்லி – மேகநிற அந்திமல்லிச் செடி
நீலவழுதலைச்செடி – நீலக்கத்திரிச்செடி
நீலன் – துருசு
நீலாங்கு – புழு
நீலாச்செடி – அவுரிச்செடி
நீலாம்புக்கொடி – கருங்குவளைக்கொடி
நீலிச்செடி – அவுரிச்செடி
நீலிச்சொரிமரம் – சொரிவழுக்கை மரம்
நீலியமரம் – மருதோன்றிமரம்
நீலியா வரை – சூரத்தாவரைச்செடி
நீலிவேர் – அவுரிவேர்




