HomeUncategorizedசித்த வைத்திய அகராதி 9351 - 9400 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய அகராதி 9351 – 9400 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய அகராதி 9351 – 9400 மூலிகைச் சரக்குகள்

பண்டுகவரிசி – நெல்லரிசி
பண்டுலிக்கீரை – சிறுகீரை
பண்ணை – ரசம், வெடியுப்பு
பண்ணைக்காலிகச்செடி – சூரஞ்செடி
பண்ணைக்கீரை – பிண்ணாக்கு கீரை
பண்ணைச்சேவிதச்செடி – சங்கஞ்செடி
பண்ணைமரம் – மூங்கில்மரம்
பண்ணைமாரிதக்கொடி – இண்டங்கொடி
பண்ணையரிசி – மூங்கிலரிசி
பண்ணையுப்பு – வெடியுப்பு
பதகரப்புல் – அறுகம்புல்
பதகரிக்கொட்டை – காப்பிக்கொட்டை
பதரிகமரம் – இலந்தைமரம்
பதரிகாச்செடி – கருநாயுருவிச்செடி
பதரைக்கிழங்கு – வெந்தோன்றிக் கிழங்கு
பதபைமரம் – கருந்தேக்குமரம்
பதிகரக்கொடி – நீர்ப்பாசிக் கொடி
பதிச்சமரிசி – வாலுளுவையரிசி
பதிச்சியக்குவரள – கருங்குவளைக் கொடி
பதுகரப்பாலை – பழமுண்ணிப்பாலைமரம்
பதுக்காரக்குமிட்டி – கச்சக்குமிட்டிக் கொடி
பதுமக்கொடி – தாமரைக்கொடி
பதுமபத்திரம் – தாமரையிலை
பதுமார்க்கியச்செடி – கவிழ்தும்பைச் செடி
பதுமாலயப் பூண்டு – சீதேவிப்பூண்டு
பத்தறாக்கொடி – மொசுமொசுக்கைக்கொடி
பத்தாலகச் செடி – நரிவழுக்கைச் செடி
பத்தியகாரிக்கீரை – சிறுகீரை
பத்திராசியம் – சந்தனம்
பத்திராசிரக்கொடி – கொடிச் செண்பகம்
பத்திராச்சிலியம் – தாளிசபத்திரி
பத்திராஞ்சனச்செடி – கருவூமத்தைச் செடி
பப்பரப்புளிமரம் – பொந்தம்புளிமரம்
பப்பாளிகைமரம் – பப்பாளிமரம்
பப்பாளிமரம் – கற்பாகினிமரம்
பம்பந்திராய்ப் பூண்டு – திராய்ப்பூண்டு
பம்பரைமரம் – பலா மரம்
பம்பளிமாசுப் பழம் – பைமாசுப்பழம்
பம்பாரிமரம் – பெருங்குமிழ்மரம்
பம்பிகைக்கொடி – பீர்க்குக்கொடி
பம்பேயமரம் – நொச்சுளிமரம்
பயதிராவண்டு – சுழல்வண்டு
பயறுமுற்றியவரை -கொட்டையவரை
பயற்றங்கரிசி – காடைக்கண்ணியரிசி
பயற்றங்கள்ளிமரம் – கள்ளிமரம்
பயற்றங்கன்னிப் பயறு – காராமணிப் பயறு
பயற்றங்காய்க் கொடி – தட்டைப்பயற்றுக் கொடி
பயனீகரிமரம் – செந்தாழைமரம்
பயிரவிக்கொடி – முடக்கொத்தான்கொடி
பயிரவீகியரளி – தங்கரளி மரம்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments