சித்த வைத்திய அகராதி 9401 – 9450 மூலிகைச் சரக்குகள்
பயிருகக்கொடி – பழம்பாசிக் கொடி
பயிலகப்பலாச்செடி – தட்டுப்பலாச் செடி
பயிலியமேனிச்செடி – குப்பைமேனிச் செடி
பரலோகமினி – பத்மினி
பாவெளிமூளை – மண்டைமூளை
பராகமம் – சந்தனம்
பராசயக்காய் – போஸ்துக்காய்
பரி – தங்கம்
பரிசகமரம் – பேயாலமரம்
பரிதிக்கீரை – வெண்கீரைத் தண்டு
பரிதிநீர் – பனிநீர்
பரித்தகடு – தங்கத்தகடு
பரித்தவமரம் – கருங்காலிமரம்
பரித்திச்செடி – பருத்திச்செடி
பரிபதி – பகைவர்
பரிபாசி – குதிரைவாலியரிசி
பரியாமிச்செடி – மருளுமத்தைச் செடி
பரிவாலியரிசித் தட்டை – குதிரைவாலித் தட்டை
பரிவிந்துமரம் – தில்லைவிருட்சம்
பரிவிளங்கம் – வாய்விளங்கம்
பரிவேதைமரம் – முண்டக விருட்சம்
பருங்காராமணி – பெருங் காராமணிப் பயறு
பருங்காலிகமரம் – தணக்குமரம்
பருங்காளான் – பெருங்காளான்
பருங்கோரை – சம்பைக் கோரை
பருசலவரிசி – எர்க்கட்டரிசி
பருதிப்பாதிரிமரம் – வெண்பாதிரி மரம்
பருதிப்பால் – எருக்கன்பால்
பருத்துவச்செடி – குடமல்லிகைச் செடி
பருத்தவழகிப்பூ – மல்லிகைப்பூ
பருத்தாரவரிசி – குதிரைவாலியரிசி
பருத்திச்செடி – வெண்பருத்திச்செடி
பருத்திதாச் செடி – உப்பம்பருத்திச் செடி
பருத்திமரம் – மலைப்பருத்தி மரம்
பருநகக்கொன்னை – செங்கொன்னை மரம்
பருநன்னாரி – மலைநன்னாரிக் கொடி
பருநீலிச்செடி – செம்பருத்திச்செடி
பருப்புக்கீரை – சொக்காக்கீரை
பருமிட்டான்செடி – அடுக்குச் செம்பரத்தைச்செடி
பருவிருட்சம் – தில்லைவிருட்சம்
பரேதகச்செடி – பைசாசமுள்ளிச்செடி
பரைநாதம் – கெந்தகம், பூநீர்
பரைநாதவஞ்சிமரம் – நெல்லிமரம்
பர்க்கேண்டிபிச்சுக்செடி – சீமைச்செடி
பர்ணாகமரம் – கூமாஷ்மரம்
பலகீரை – கூட்டுக்கீரை
பலகைக்கள்ளி – சதுரக்கள்ளி
பலசாடவமரம் – மாதளைமரம்
பலசாலி யரிசி – கோதுமையரிசி
பலசிரேஷ்டமரம் – மாமரம்




