சித்த வைத்திய அகராதி 9451 – 9500 மூலிகைச் சரக்குகள்
பலசுக்கொடி – பாலாட்டங்கொடி
பலச்சகிக்கொடி – குன்றிமணிக் கொடி
பலச்சாரமரம் – இரத்தக்கொய்யா மரம்
பலதூசுக்கீரை – புளியாரைக்கீரை
பலதேசிகக்கனி – ஆரஞ்சுப்பழம்
பலநெய் – சேர்க்கைநெய்
பலந்தசியமரம் – மலையிலுப்பை மரம்
பலபூரகமரம் – மாதளை மரம்
பலபூரச்செடி – கொம்மட்டி மாதளைச் செடி
பலப்பிராதீகம் – திப்பிலி
பலம்பக்கொட்டை – சேங்கொட்டை
பலம்பூதம் – ஐந்துபலம்
பலவச்செடி – கற்சூரஞ்செடி
பலவரை – சமுத்திரசோகி
பலவாடைப்பூண்டு – செம்பருத்திச் செடி
பலவுமரம் – பலாமரம்
பலனிகாக்கள்ளி – சதுரக்கள்ளி
பலன்காயம் – ஈரவெங்காயம்
பலன்றிகாசச்செடி – தேயிலைச் செடி
பலன்றுருகபாஷாணம் – பங்கபாஷாணம்
பலாகணமரம் – தேக்குமரம்
பலாகமோதிச்செடி – தொட்டாற்சிணுங்கிச் செடி
பலாசுமரம் – புரசுமரம்
பலாண்டுகம் – ஈரவெங்காயம்
பலாதகத்தட்டை – நாணல்தட்டை
பலாதவக் கொடி – பூனைக்காலிக் கொடி
பலாத்தியப்பாலை – பழமுண்ணிப்பாலை மரம்
பலாமரம் – முட்பலாமரம்
பலாலதோதகமரம் – மாமரம்
பலாலம் – வைக்கோல்
பலாவீழிச்செடி – விழுதிச்செடி
பலானவச்செடி – காட்டாதளைச் செடி
பலினிமரம் – கோங்குமரம்
பலுகமரம் – மந்தாரைமரம்
பலோருகமரம் – பாதிரிமரம்
பலோற்காமரம் – நாரத்தைமரம்
பலோற்பதிமரம் – மாமரம்
பல்லவக்கொடி – புளியம்பிரண்டைக் கொடி
பல்லவத்திருமரம் – அசோகுமரம்
பல்லவத்திருமரம் – அசோகுமரம்
பல்லவபாணிச்செடி – புளிப்பிலந்தைச்செடி
பல்லாதகிக்கொட்டை – சேங்கொட்டை
பல்லாதாரினிச்செடி – நாறுகரந்தைச்செடி
பல்லாதிகிரிமரம் – சேராமரம்
பல்லிகாக் கொட்டை – சேங்கொட்டை
பல்லிகைக்கொட்டை – சேங்கொட்டை
பல்லிகைப்பூடு – பல்லிப்பூடு
பல்லிப் பூடு – நின்றிடந்தீஞ்சான் பூடு
பல்லிருள்மரம் – இரும்பிலிமரம்
பல்லினற்கள்ளி – சதுரக்கள்ளி




