HomeUncategorizedபோகர் சப்தகாண்டம் 1401 - 1405 of 7000 பாடல்கள்

போகர் சப்தகாண்டம் 1401 – 1405 of 7000 பாடல்கள்


போகர் சப்தகாண்டம் 1401 – 1405 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

1401. வாதியாம் வீரமது பலமேவாங்கி
வகுப்புடனே வில்வமது நாற்பதாகும்
பாதியாம் வில்வமது
பழத்தைக்கீறி பாங்காகத்தான்பொதிந்து சீலைசெய்து
ஆதியாம் மண்மறைவிற்
புடத்தைப்போடு அப்பனே புடமதுவுங் கோழியாகும்
வேமேதா னிப்படியே புடமேபோடு
வெடியான நாற்பது பழமுமாமே
விளக்கவுரை :
1402. பழமான காயதுவும் நாற்பதாகும்
பக்குவமாய்ப் புடம்போடக் கட்டிப்போகும்
கழமான வீரமதை வுமிநீதன்னாய்
கருவான பொன்மட்டம்தன்னிற்பூசி
குழமான
பூங்காவிதன்னிற்குள்ளே பொதித்துமே புடம்போடத் தங்கமாகும்
மழமான வீரத்தின் போக்குகோடி
மகிலமதில் மெத்தவு மதிக்கப்போமோ
விளக்கவுரை :

[ads-post]
1403. மதிக்கவே தாளகமோர் பலமேவாங்கி
மகத்தான தும்பைசார் குமரிசாரொக்க
கதிக்கவே பழச்சாற்றால்
குறுகையாட்டி கவசமாய்த் தாளகத்துக்கங்கிபூட்டி
துதிக்கவே பத்தெருவிற்
புடத்தைப்போடு துலக்கமுடன் தாளகமும் கட்டிப்போகும்
விதிக்கவே யிப்படியே
பத்துபுடம்போடு விரைவான தாளகமும் கட்டிப்போமே
விளக்கவுரை :
1404. கட்டியதோர் தாளகமும்
பலமொன்றாகும் கதிப்பான சூதமுடன் கெந்திதானும்
திட்டமுடன் வறுவகையாஞ்
ஜெயநீர்தன்னால் திறமுடனே தானரைப்பாய் சாமம்நாலு
சட்டமதாய்ப் பில்லையது
காயவைத்து சார்வாக வில்லையது ஓட்டிலிட்டு
மாட்டமுடன் கோழியென்ற
புடத்தைப்போடு மார்க்கமுடன் செந்தூரமாகும்பாரே
விளக்கவுரை :
1405. பாரேதான் செந்தூரம்
பதனம்பண்ணு படிகமென்ற வெள்ளிசெம்பில் பத்தக்கொன்று
நேரேதான் தானுருக்கி
செந்தூரத்தை நேர்பாகத் தான்கொடுக்க வாங்கிக்கொள்ளும்
சீரேதான் கரியோட்டி
லூதிப்போடு சிறப்பாக மாற்றதுவு மெட்டதாகும்
கூரேதான் ஆறுக்கோர் தங்கஞ்சேர்த்து
குறிப்பாகப் புடம்போடத் தங்கமாமே
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments