HomeUncategorizedபோகர் சப்தகாண்டம் 1411 - 1415 of 7000 பாடல்கள்

போகர் சப்தகாண்டம் 1411 – 1415 of 7000 பாடல்கள்


போகர் சப்தகாண்டம் 1411 – 1415 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

1411. மட்டமது வைந்துக்கோர்
தங்கஞ்சேர்த்து மயங்காமல் வாறடித்துப் புடத்தைப்போடு
திட்டமுடன் மாற்றதுவு
மிகவேயாகும் திறமான துருசுடைய களங்குவேதை
சட்டமதாய் கண்டருட வேதை
மார்க்கம் சாற்றவுமெவராலு முடியாதையா
நட்டமில்லை யிவ்வேதை
பரிசைவேதை நாதாக்கள் செப்புகின்ற மார்க்கம்பாரே
விளக்கவுரை :
1412. மார்க்கமாம் வேதையிது
சுளுக்குவேதை மானிலத்தில் தவயோகிசெய்வாரப்பா
தீர்க்கமுடன்
யோகநிலைதன்னிற்சென்று தெளிவாக சின்மயத்திலிருந்துகொண்டு
மார்க்கமுடன் பிராணநிலை
சொரூபம்பற்றி பரகதிக்கு நன்மனதாய் வொடுக்கம்பார்த்து
சேர்க்கமுடன் திவ்யகலை
தானிறுத்தி சிதம்பரத்தி னடனவொளி காணுவீரே
விளக்கவுரை :

[ads-post]
1413. காணவே யின்னமொரு
மார்க்கங்கேளு கருவான காந்தமது ஊசிக்காந்தம்
பூணவே தேன்விட்டு
வரைத்துமேதான் பொங்கமுடன் மூசையிட்டு வுருக்கித்தீரு
வேணவே சத்தெடுத்து
சூதஞ்சேர்த்து விருப்பமுடன் கெந்தியது காலாய்க்கூட்டி
மாணவே வறுவகை ஜெயநீர்தன்னால்
மாட்டாநாற் சாமமரைத்துப்போடே
விளக்கவுரை :
1414. போடவே ரவிதனிலே காயவைத்து
பூப்போல தானுதிர்த்து பொடித்துமேதான்
நாடவே காசிபென்ற
குப்பிகொண்டு நன்மைபெற சீலையது யேழுஞ்செய்து
கூடவே குப்பிக்குள்
மருந்தையிட்டு குறிப்பாக பலபத்தின் கல்லால்மூடி
சாடவே ஈட்டிதனில்
மணலைக்கொட்டிச் சார்புடனே குப்பிநடு மையம்வையே
விளக்கவுரை :
1415. வைத்துமே மணல்கொண்டு
மேலேசெம்மி வளமாக சட்டிகொண்டுமூடிச்சீலை
சத்துமே போகாமல் தீயைமூட்டி
சாங்கமாய்த் தானெரிக்க செந்தூரம்தான்
முத்தமுடன் வெள்ளிசெம்பில்
பத்துக்கொன்று முயற்சியுடன் தான்கொடுக்க
மாற்றுங்காணும்
சுத்தமுட னூதிப்பார்
மாற்றேயேகு சூட்சமுடன் போகரிஷிவறைந்ததாமே  
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments