HomeUncategorizedபோகர் சப்தகாண்டம் 1421 - 1425 of 7000 பாடல்கள்

போகர் சப்தகாண்டம் 1421 – 1425 of 7000 பாடல்கள்


போகர் சப்தகாண்டம் 1421 – 1425 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

1421. ஒன்றான மதியுடனே
ரவியுஞ்சேர்ந்து வுத்தமனே மாற்றதுவும் பழுக்கும்பாரு
நன்றான தங்கமது
இரண்டுக்கொன்று நயமுடனே தான்கொடுத்து புடத்தைப்போடு
குன்றான பொன்னதுவு மேழதாகும்
குணமான நயப்புடனே மின்னும்பாரு 
அன்றான வயத்தினுட
போக்கைச்சொல்ல அரனாலு மயனாலஉ முடியாதென்றே
விளக்கவுரை :
1422. முடியான செந்தூரம்
வேதைப்போக்கு முனிகோடி ரிஷிமுதலெலொர் சொல்வார்கோடி
வெடியான செந்தூரங்கொண்டபோது
விருப்பமுடன் வாயுவென்ற தெண்பதுபோம்
தடியான தேகமதுமுருக்கேயேறி
தாதுகளுமிகவலுத்து யிரத்தமுண்டாம்
குரியான சேத்துமத்தை
யடுத்துப்போடும் குணமாகுந் தேகமது இருகும்பாரே
விளக்கவுரை :

[ads-post]
1423. பாரேதா னின்னமொரு பற்பங்கேளு
பாங்கான சிங்கியொருபலமேவாங்கி
சீரேதான் கோமியத்திலூதிப்பின்பு
செழிப்புடனே பசும்பாலிலரைத்துமேதான்
நேரேதான் புடமதுவுங் கோழியாக
நேர்ப்புனே தான்போட பற்பமாகும்
கூரேதான் பற்பமதுக்கிடையே
சூதம் குறிப்பாகத்தான் சேர்த்தரைத்திடாயே
விளக்கவுரை :
1424. அரைக்கவே வாராதா ரச்சரக்கால்
அப்பனே ஜெயநீராய்செய்துகொண்டு
திரைக்கவே நாற்சாம
மரைத்தபோது திறமான பற்பமதுக் கிணைவேறுண்டோ
நிரைக்கவே பில்லைதட்டிக்
காயவைத்து நிறமாகப் புடம்போடப் பற்பமாகும்
முறைக்கவே ஜெயநீரின்
போக்கைச்சொல்வோம் முழுமக்களானவரு மறியத்தானே
விளக்கவுரை :
1425. அரியவே அராதாரச்சரக்கை அன்புடனே யாமுரைப்போமதீதமாக
தெரியவே காரமுடன்
சாரந்தானும் திறமான துருசுடனே சீனந்தானும்
புரியவே வெடியுப்பு
கரியுப்புமாகும் புகழான வித்தனையுமாராதாரம்
சரியவே மாணாக்காள்
பிழைக்கவென்று சாற்றினார் போகரிஷிதன்மைபாரே
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments