HomeUncategorizedபோகர் சப்தகாண்டம் 4636 - 4640 of 7000 பாடல்கள்

போகர் சப்தகாண்டம் 4636 – 4640 of 7000 பாடல்கள்


போகர் சப்தகாண்டம் 4636 – 4640 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

4636. காணவே போகரிஷிநாதர்தானும்
கனமான வடிவேலர் மயிலுக்கல்லோ
தோணவே யுபசார வார்த்தைகூற
தோன்றாமல் பொன்மயிலும் மனதுவந்து
பூணவே தேவர்பதி
மகிமையெல்லாம் புகழான பொன்னுலோக மர்மனைத்தும்
வேணவே யமரர்பதி
சரித்திரங்கள் விருப்பமுடன் உபதேசங்கூறலாச்சே
விளக்கவுரை :
4637. ஆச்சப்பா கைலாசமர்மமெல்லாம்
அடைவுடனே போகரிஷிமுனிவர்தானும்
பேச்சுமொழி
வாய்ஞானந்தன்னிற்றானும் பேரான வுபதேசமனைத்துங்கொண்டு
பாச்சலுடன் விடையதுவும்
பெற்றுக்கொண்டு பாங்கான குளிகையது பூண்டுமேதான்
ஆச்சரிய மாகவல்லோ சீனதேசம்
வன்புடனே தம்பதிக்கு வந்திட்டாரே
விளக்கவுரை :

[ads-post]
4638. வந்தாரே சீனபதிதன்னிற்சென்று
வளமுடனே முக்காதக்கோட்டைக்குள்ளே
அந்தமுடன்
போகரிஷிமுனிவர்தானும் அகங்களித்து மனதுவந்து குளிகையிட்டு
சொந்தமுடன் காலாங்கி
சமாதிபக்கல் சுத்தமுடன் மேற்புறத்தில் வாசல்நின்று
சிந்தனையாய் அஞ்சலிகள்
மிகவுஞ்செய்து சிறப்புடனே சிரங்குனிந்து வணங்கிட்டாரே
விளக்கவுரை :
4639. வணங்கியே இருகரமுந்
தான்குவித்து வளமுடனே பதாம்புயத்தை மிகவும்நண்ணி
இணங்கியே சமாதியது கபாடவாசல்
இணக்கமுடன் அர்ச்சனைகள் புரியும்போது
சுணங்கமது வாராமல்
காலாங்கிநாதர் சுடரொளியாஞ் சமாதியது திறந்துதங்கே
கணமுடனே வாத்தியங்கள்
ஆர்பரிக்க கர்த்தாவாஞ் ஜெகஜோதி காணலாச்சே
விளக்கவுரை :
4640. காணுகையில் போகரிஷி
முனிவர்தானும் காலாங்கி ஜெகஜோதிநாதருக்கு
தோணவே சீனபதிவிட்டுமல்லோ
துரைராஜபோகரிஷிமுனிவர்தானும்
நீணவே குளிகையது மிகவேபூண்டு
நிட்களங்க கிக்கிந்தா மலையில்தானும்
வேணதொரு தான்கண்ட வதிசயங்கள்
விருப்பமுடன் கூறுவார் காலாங்கிக்கே
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments