HomeUncategorizedபோகர் சப்தகாண்டம் 4701 - 4705 of 7000 பாடல்கள்

போகர் சப்தகாண்டம் 4701 – 4705 of 7000 பாடல்கள்


போகர் சப்தகாண்டம் 4701 – 4705 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

4701. கண்டாரே மடுதனையே
போகர்தானும் கண்கொள்ளா வாங்கார கோபத்தோடும்
தண்மையுடன் மடுவற்றி
வெடுத்துமல்லோ தாரணியிலிருந்த தொருமார்க்கந்தன்னை
வண்மையுள்ள வதிசயத்தை
கண்டுமல்லோ வளமான காலாங்கி சீஷன்தானும்
உண்மையுடன் காலாங்கி
நாதர்தம்மை வுற்பனமாய் தன்மனதில் நினைத்திட்டாரே
விளக்கவுரை :
4702. நினைக்கவே காலாங்கி
நாதர்தானும் நீடாழி மடுதனில் சென்றாரென்று
புனைமேவுஞ் சீஷனுக்கு
வரமுந்தந்து புகழான முதலையது சாபந்தீர்ந்து
வினையகற்றி நவகண்ட
ரிஷியாருக்கு வீரான பிறவியது தானுந்தந்து
சுனைமடுவை விட்டுமல்லோ
வருவதற்கு துப்புறவாய் வரமதுவும் கொடுத்திட்டாரே
விளக்கவுரை :

[ads-post]
4703. கொடுத்ததொரு வரமதுதான்
போகர்தானும் கொப்பெனவே தன்மனதில் மனதுவந்து
அடுத்துமே மடுதனிலே
நின்றுகொண்டு வன்புடனே பராபரத்தின் பொருளைநண்ணி
கொடுத்ததொரு மனோன்மணியை
மனதிலெண்ணி துப்புரவாய் யாகமதுசெய்யும்போது
மடுதனிலே ஜலமதுவும்
பொங்கியல்லோ மகத்தான முதலைதனை காணலாச்சே
விளக்கவுரை :
4704. காணவே போகரிஷிமுனிவர்தானும்
கருவான மடுதனிலே முதலைதன்னை
ஆணவங்கள் தானொடுங்க
கரத்தைக்காட்டி அகங்கார சீறலுடன் அழைக்கலுற்றார்
பூணவே முதலையது அடிவணங்கி
புகழான போகரிஷிமுனியைப்பார்த்து
வேணதொரு வஞ்சலிகள்
வுபசாரங்கள் விருப்பமுடன் போகருக்குச் செய்யலாச்சே
விளக்கவுரை :
4705. செய்யவே போகரிஷிமனங்களித்து
சிற்பரனார் காலாங்கி தனைநினைத்து
வையகங்கள் தான்புகழும்
காலாங்கிநாதர் மகதேவா எந்தனது குருவேகேளும்
மெய்தவங்கள் பூண்டதொரு
மகிமையானும் வேதாந்த மனோன்மணித்தாய் கிருபையாலும்
கைதவமாய் வந்துதித்து
முதலைதானும் காசினியில் மடுதனிலே கண்டிட்டேனே
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments