HomeUncategorizedபோகர் சப்தகாண்டம் 4971 - 4975 of 7000 பாடல்கள்

போகர் சப்தகாண்டம் 4971 – 4975 of 7000 பாடல்கள்


போகர் சப்தகாண்டம் 4971 – 4975 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

4971. கண்டதொரு
வதிசயங்களெல்லாங்கண்டேன் காசினியில் காணாத காட்சியெல்லாம்
சண்டமாருதம்
என்னும்மேருதன்னில் சாங்கமுடன் மகிமையெல்லாம் கண்ணிற் கண்டேன்
கொண்டல்வண்ணன் மேகமென்ற
இடியுங்கண்டேன் கோடான கோடிவரை
முனையுங்கண்டேன்
விண்டிடு வதிசயங்கள்யாவும்
பார்க்க விருப்பமுடன் மேல்வரையில் வந்திட்டேனே
விளக்கவுரை :
4972. வந்தேனே யென்றுமேதான்
இதவுகூற வளமையுள்ள ரிஷியாரும் மனதுவந்து
வந்தையுள்ள வதிசயங்கள்
எல்லாஞ்சொல்லி வேதாந்தத் தாயினது மார்க்கங்கூறி
அந்தமுடன் கைலாசபதியிற்செல்ல
வப்பனே எந்தனுக்கு விடையுந்தந்து
சுந்தரனே எந்தனையும்
ஆசீர்மித்து சூட்டினார் இருபத்தோர் வரையிற்காணே
விளக்கவுரை :

[ads-post]
4973. வரையான கைலாசபதியைக்காண வண்மையுடன் காலாங்கி கடாட்சத்தாலே
திரைபோன்ற கடலோரஞ்
சுற்றிவந்தேன் தீரமுடன் இருபத்தோர் வரையிற்சென்றேன்
நரையான மேருகிரி
சிகரந்தன்னில் கைலாசநாதரையான் காணவெண்ணி
குறையதுவும் நேராமல்
அடியேன்தானும் குளிகைகொண்டு மேல்வரையிற்
சென்றேன்தானே
விளக்கவுரை :
4974. தானான மேருகிரி தன்னிலப்பா
தண்மையுடன் இந்திரனார்பதியுங்கண்டேன்
தேனான மனோன்மணியாள்
பீடங்கண்டேன் தேற்றமுடன் கருடகந்தருவர் கண்டேன்
கோனான யஷ்டதிக்கு
பாலர்கண்டேன் கூறான நாற்பத்தொண்ணாயிரம்பேர்
மானான மகதேவர்
முனிவர்கண்டேன் மகத்தான முப்பத்து மூன்றுதானே
விளக்கவுரை :
4975. மூன்றான தேவர்முதல்
கோடியப்பா முனையான ரம்பை ஊர்வசியாளோடும்
சான்றதொரு நந்தீசர்
முதலானோரும் சார்பான பிரிங்கிமகாரிஷியாரோடும்
போன்றதொரு மார்க்கண்ட
முனிவரோடும் புகழான குருந்தர் முதல் வசிட்டரோடும்
சான்றதொரு நாரதமா
முனிவரோடும் சார்பான பதிதனையே பார்த்திட்டேனே
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments