4976. பார்த்திட்டேன் சிவனடியார்
கூட்டத்தோடும் பாங்கான தேவகனநாதரோடும்
கூட்டத்தோடும் பாங்கான தேவகனநாதரோடும்
தீர்த்தமுடன் வைகைதனை
வரவழைத்து தீர்க்கமுடன் வாரிதியை யுண்டதீரன்
வரவழைத்து தீர்க்கமுடன் வாரிதியை யுண்டதீரன்
கோர்த்தவகை வைத்ததொரு குண்டோதரன்தான்
குண்டலியாம் பூதமதை யானுங்கண்டேன்
குண்டலியாம் பூதமதை யானுங்கண்டேன்
ஆர்த்துமே பிர்மாவின்
பாதங்கண்டேன் வன்பான சிவபாத தூள்கண்டேனே
பாதங்கண்டேன் வன்பான சிவபாத தூள்கண்டேனே
விளக்கவுரை :
4977. தூளான பாத்திரத்தின்
தூசுகண்டேன் துகளற்ற விஷ்ணுசக்கரமுங்கண்டேன்
தூசுகண்டேன் துகளற்ற விஷ்ணுசக்கரமுங்கண்டேன்
காளானின் நிறம்போல பாரிசாதம்
களவமென்ற மாலையுடன் அனேகர்கண்டேன்
களவமென்ற மாலையுடன் அனேகர்கண்டேன்
பாளான நரகமுடன்
மோட்சங்கண்டேன் பாங்கான எமதூதர் சேர்வைகண்டேன்
மோட்சங்கண்டேன் பாங்கான எமதூதர் சேர்வைகண்டேன்
ஆளான மாண்பர்களின்
பாவந்தன்னை அநியாயமான தண்டனைகண்டேனே
பாவந்தன்னை அநியாயமான தண்டனைகண்டேனே
விளக்கவுரை :
[ads-post]
4978. தண்டனையாம் அவரவர்கள்
செய்தகுற்றம் தாக்கான படுநரகில் வீழக்கண்டேன்
செய்தகுற்றம் தாக்கான படுநரகில் வீழக்கண்டேன்
மிண்டான அவரவர்கள்
செய்தகன்மம் விளைந்துதடா கொடியதொரு நீதிதண்டம்
செய்தகன்மம் விளைந்துதடா கொடியதொரு நீதிதண்டம்
அண்டர்முனி ராட்சதர்கள்
முதலானோர்கள் அவரவர்கள் செய்ததொரு வினைபாவத்தால்
முதலானோர்கள் அவரவர்கள் செய்ததொரு வினைபாவத்தால்
தண்டனைகள் காலதூதர்
செய்யக்கண்டேன் தகமையுள்ள இந்திர பதியிற்றானே
செய்யக்கண்டேன் தகமையுள்ள இந்திர பதியிற்றானே
விளக்கவுரை :
4979. தானாக அவரவர்கள்
செய்தபுண்ணியம் தக்கபடி மாண்பர்களுக்கு உகந்தமார்க்கம்
செய்தபுண்ணியம் தக்கபடி மாண்பர்களுக்கு உகந்தமார்க்கம்
கோனான எனதையர் காலாங்கிநாதர்
கொற்றவனார் சொற்படியே யாவுங்கண்டேன்
கொற்றவனார் சொற்படியே யாவுங்கண்டேன்
தேனான மோட்சமென்ற
பீடந்தன்னில் தேற்றமுடன் புண்ணியர்கள் இருக்கக்கண்டேன்
பீடந்தன்னில் தேற்றமுடன் புண்ணியர்கள் இருக்கக்கண்டேன்
மானான மகதேவர்
புண்ணியக்கூட்டம் மார்க்கமுடன் கூடிருக்கப் பார்த்திட்டேனே
புண்ணியக்கூட்டம் மார்க்கமுடன் கூடிருக்கப் பார்த்திட்டேனே
விளக்கவுரை :
4980. பார்த்தேனே யொருகோடி
வெள்ளஞ்சேனை பாங்கான மேருகிரி தன்னிலப்பா
வெள்ளஞ்சேனை பாங்கான மேருகிரி தன்னிலப்பா
தீர்த்தமுடன் கைலங்கிரி
வாசர்தன்னை சிறப்புடனே கைலாயபதியிற் கண்டேன்
வாசர்தன்னை சிறப்புடனே கைலாயபதியிற் கண்டேன்
சேர்த்ததொரு வெகுமாண்பர்
கூட்டத்தோடும் ஜெகதலத்தில் புண்ணியர்கள் அனேகங்கண்டேன்
கூட்டத்தோடும் ஜெகதலத்தில் புண்ணியர்கள் அனேகங்கண்டேன்
நேர்த்தியுடன் பட்டதிசை
தன்னிலப்பா நேர்மையுடன் அதிசயங்கள் மிகவுண்டாமே
தன்னிலப்பா நேர்மையுடன் அதிசயங்கள் மிகவுண்டாமே
விளக்கவுரை :