HomeUncategorizedபோகர் சப்தகாண்டம் 5411 - 5415 of 7000 பாடல்கள்

போகர் சப்தகாண்டம் 5411 – 5415 of 7000 பாடல்கள்


போகர் சப்தகாண்டம் 5411 – 5415 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

5411. தானான யின்னமொரு
மார்க்கஞ்சொல்வேன் தகமையுள்ள புலிப்பாணி மைந்தாகேளு
நாறான வண்டமென்ற காகமப்பா
நலமான தாகமது கொண்டுவந்து 
மாறான வுயிரதுவும்
போக்கியல்லோ மகத்தான சிரசதனை சோதித்தாக்கால்
கூறான நீலாஞ்சனக்
கல்லுதானும் கொற்றவனே யிருக்குமது பாருபாரே
விளக்கவுரை :
5412. நூறான வருஷமது கடந்தகாகம்
நுட்பமுடன் கண்டறிந்து மைந்தாகேளு
நாறான வண்டமென்ற காகமப்பா
நலமான தாகமது கொண்டுவந்து 
மாறான வுயிரதுவும்
போக்கியல்லோ மகத்தான சிரசதனை சோதித்தாக்கால்
கூறான நீலஞ்சனக்கல்லுதானும்
கொற்றவனே யிருக்குமது பாருபாரே  
விளக்கவுரை :

[ads-post]
5413. பாரேதான் நீலஞ்சனக்
கல்லுதன்னை பட்சமுடன் தானெடுத்து மைந்தாகேளு
சீரேதான் பதனமது செய்துமல்லோ
சிறப்பான வையகத்தில் மாந்திரீகனாவாய்
நேரான ராஜாதி ராஜர்தானும்
நேர்மையுடன் சமாதிவைத்த நிதியனைத்தும்
கூரேதான் சல்லியமாம்
வித்தைதன்னால் குறிப்பான வஞ்சனத்தால் எடுக்கக்கேளே
விளக்கவுரை :
5414. கேளேதான் கருவென்ற மைதானப்பா
கெணிதமுடன் வுள்ளங்கை தன்னிற்றோய்த்து
சூளேதான் அஞ்சனமாங்
கல்லைத்தானும் சுத்தமுடன் வுள்ளங்கைத் தன்னில்வைத்து
பாளேதான் போகாமல் அஞ்சனத்தை
பஞ்சமுடன் தான்பார்க்க நிதிகள் தோன்றும்
ஆளேதான் திரவியத்தை
எடுக்கலாகும் அப்பனே நீலாஞ்சன மகிமைபாரே
விளக்கவுரை :
5415. மகிமையாம் இன்னமொரு
மார்க்கங்கேளு மகத்தான நீலாஞ்சனக் கல்லினாலே
அகிலமெலாம் நிதியெடுக்க
இதனாலாகும் அப்பனே அஞ்சனமும் இதற்கீடல்ல
முசியாமல் சித்தர்முனி
ரிஷிகள்தாமும் மூர்க்கமுடன் சாஸ்திரங்கள் அனேகஞ்செய்தார்
தகியுடனே நீலாஞ்சனக் கல்லின்மார்க்கம்
சாற்றலில்லை சித்தர்முனி ரிஷிகள்தாமே
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments