HomeUncategorizedபோகர் சப்தகாண்டம் 5586 - 5590 of 7000 பாடல்கள்

போகர் சப்தகாண்டம் 5586 – 5590 of 7000 பாடல்கள்


போகர் சப்தகாண்டம் 5586 – 5590 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

5586. சொல்லவென்றால்
முப்புறமுங்காடேயாகும் தோறாமல் பட்டினத்தின் தொகைதான்
சொல்வேன்
வெல்லவே பட்டினங்கள்
அறுபத்திநான்கு மேன்மையுடன் குரிச்சிகளோ கணக்கோயில்லை
புல்லவே நதிபாகம்
நூற்றிருபதாகும் புகழான சிறுநதிகளனந்தங்கோடி
மேல்லவே ஏரிவகை
யிருநூற்றிப்பத்து மேன்மையுடன் கால்வாய்கள் கணக்கில்லைதானே
விளக்கவுரை :
5587. தானான தேவதாஸ்தலங்கள்தன்னை
சாற்றுகிறேன் அஷ்டதிக்குப் பூமிமட்டும்
கோனான காலாங்கி நாதர்தாமும்
கொற்றவனார் குளிகையது பூண்டுசென்ற
தேனான தேவாலயத்
தொகையைச்சொல்வேன் தேற்றமுடன் நூற்றிருபத்திரண்டு
மானான மகாஸ்தலங்கள்
இதுவேயாகும் மகத்தான சிறுஸ்தலங்கள் சொல்லொண்ணாதே
விளக்கவுரை :

[ads-post]
5588. ஒண்ணாது மானிடர்கள் வளப்பஞ்சொல்வேன் வுத்தமனே காலாங்கி கிருபையாலே
திண்ணமுடன் வையகத்தில்
திசைகளெட்டும் சுத்திவந்தேன் சத்தகடல் பூமியெல்லாம்
அண்ணாந்து மலைவனத்தில்
சிகரங்கண்டேன் அதிலிருந்த மார்க்கமெல்லாந்
தெரிந்தேன்யானும்
வண்ணமுடன் மானிடரின்
ரூபந்தன்னை வளமையுடன் சொல்லுகிறேன் பண்பாய்க்கேளே
விளக்கவுரை :
5589. கேளப்பா சிலதேச
மாந்தர்தானும் கெடியான ரூபமது அஸ்வரூபம்
மாளப்பா சிலதேச
மாண்பர்தானும் மகத்தான சிங்கமென்ற முகமேயாகும்
ஆளப்பா சிலதேசமாண்பர்தானும்
வப்பனே ஆஞ்சநேய ரூபமாகும்
வீளப்பா சிலதேச
மாண்பர்தானும் விகாரமுள்ள ராட்சதரின் பேதமாமே
விளக்கவுரை :
5590. ஆமேதான் சிலதேச மாண்பரப்பா
வப்பனே யலைகடலிலிருப்பார்தானும்
நாமேதான் சிலதேச
மாண்பர்தானும் நலமுடைய மன்மதன் ரூபம்போலும்
போமேதான் சிலதேச மாண்பரப்பா
புகழான ரூபமது பார்க்கொண்ணாது
தாமேதான் ரூபமது விகாரரூபம்
தனியான ஜலரூபம் சொல்லொண்ணாதே
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments