HomeUncategorizedபோகர் சப்தகாண்டம் 5581 - 5585 of 7000 பாடல்கள்

போகர் சப்தகாண்டம் 5581 – 5585 of 7000 பாடல்கள்


போகர் சப்தகாண்டம் 5581 – 5585 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

5581. பண்மையாய் வையகத்தில் மடிந்தபேரை பாருலகில் ராஜாதிராஜர்தாமும்
வண்மையுடன் கலியுகத்து
மாண்பர்தம்மில் வளமையுடன் ராஜாதிராஜரெல்லாம்
நன்மைபெற தொகைகணக்கு
கண்டதில்லை நாணிலத்தில் மடிந்தவர்கள் சேதியப்பா
உண்மைபெற சீனபதி மாண்பரெல்லாம்
வுற்றதொகை சற்றேறக் கண்டார்தாமே 
விளக்கவுரை :
5582. கண்டாரே சீனபதிமாண்பர்தாமும்
காசினியில் துகைக்கணக்கைத் தாமறிந்தார்
விண்டதொரு ராஜாதிராஜரெல்லாம்
விருதாவாய் வையகத்தை யாண்டுமென்ன
கொண்டல்வண்ணன் அச்சுதனும்
காணாமற்றான் குவலயத்தில் தான்மடிந்தார்
மற்றொன்றுமில்லை
அண்டர்முனி ராட்சதர்கள்
ஆனபேரும் அவனிதனில் கணக்கதனை யறியார்காணே
விளக்கவுரை :

[ads-post]
5583. காணவே வையகத்துக்
கணக்கையெல்லாம் கண்டறிந்தார் எந்தன்குரு நாதசாமி
தோணவே யவரிருந்த
நாட்கள்மட்டும் தோறாமல் மாண்பரிட தொகையைத்தானும்
பூணவே யுகாந்தவரை சாத்திரத்தை
புகழான காலாங்கிநாதர்தாமும்
மாணவே தொகுப்பினது
வரலாறெல்லாம் வளமுடனே கண்டறிந்து வகுத்திட்டாரே
விளக்கவுரை :
5584. வகுத்தாரே புலிப்பாணி
மைந்தாகேளு வளமையுள்ள கண்மணியே சொல்வேன்பாரு
தொகுத்ததொரு மாண்பர்களின்
கணக்குதம்மை தொல்லுலகில் தாமறிந்த மட்டுஞ்
சொன்னார்
தகுத்திடவே
வையகத்தினளவுதானும் தகமையுடன் பூமிவளமேதென்றாக்கால்
மிகுந்திடவே
சத்தசாகரமுஞ்சேர்த்து மேதினியில் மூன்றுபங்கு ஜலமுமாச்சே
விளக்கவுரை :
5585. ஆச்சப்பா பூமிவளம்
நாலிலொன்று வப்பனே கர்த்தரது ஏற்பாடல்லோ
பாச்சலுடன் பூமிக்குப்
பாதியல்லோ பாங்கான மலைவளங்கள் என்னலாகும்
மாச்சலுடன் தீவுகளும்
அஷ்டதிக்கு மகத்தான திசைநான்கு மென்னலாகும்
ஆச்சரிய மானதொரு பட்டினங்கள்
வதில்நான்கு ஓர்புரமுஞ் சொல்லலாமே
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments