HomeUncategorizedபோகர் சப்தகாண்டம் 5626 - 5630 of 7000 பாடல்கள்

போகர் சப்தகாண்டம் 5626 – 5630 of 7000 பாடல்கள்


போகர் சப்தகாண்டம் 5626 – 5630 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

5626. இருக்கவென்றால் மணியென்ற
கருவொன்றுண்டு எழிலான கருவதனைக் கண்டதில்லை
திருத்தமுடன் மணியோசைக்
கேட்டபோது திகழான மணியொன்று இருக்கும்பாரு
பொருத்தமுடன்
வையகத்திலதிசயங்கள் பொங்கமுடன் கோடானகோடியுண்டு
வருத்தமுடன் பிறப்பதுவும்
பிறப்போர்தம்மை வளப்பமுடன் மழைதனையே கண்டிட்டோமே
விளக்கவுரை :
5627. கண்டோமே லோகபதி வதிசயங்கள்
காசினியில் வேரொன்று காண்பதேனோ
அண்டமுடன் வுலகுபதிக்
கடவுள்தானும் வன்புடனே இருப்பதற்கு ஐயமுண்டோ
உண்டான சாத்திரங்கள்
பேதாபேதம் வுத்தமனே பாடிவைத்தார் அனேகமுண்டு
சண்டான முறைமைகெட்டு
சாத்திரங்கள் செப்பினார் மாண்பர்தாமே
விளக்கவுரை :

[ads-post]
5628. மாண்பரா மின்னமொரு
மார்க்கங்கேளு மகத்தான புலிப்பாணி மைந்தாபாரு
ஆண்மையுள்ள மாடனவன்
வசியமப்பா வவனிதனில் யாரறிவார் சித்துமாண்பர்
காண்மையுள்ள கருவாளி
யறிவான்பாரு காசினியில் சண்டாளன் சத்துருவேதை
பாண்மையுள்ள கர்மிகட்கும்
மர்மிகட்கும் கருவான மாடன்மந்திரமுமாமே   
விளக்கவுரை :
5629. மந்திரமாம் மாடனது
வசியத்தாலே மகத்தான மாண்பரெல்லாம் வசியமாவார்
எந்திரமாம்
மாடனதிபிரணவத்தால் எழிலான தேவதைகளெல்லாஞ் சித்தி
தந்திரமாம் மாடனது
மந்திரத்தை தண்மையுடன் சொல்லுகிறேன் தயாளபாலா
சுந்தரமாங் கருவறிந்த
மாந்தரப்பா சூட்சமுடன் செய்வான்பார் மர்மிதானே
விளக்கவுரை :
5630. தானான பிரணவங்கள்
ஏதென்றாக்கால் தண்மையுள்ள ஹரிஓம் கேளென்றபோது
கோனான அகோரமடா கம்பீராயா
குறிப்பான அகோரதர்க்க வாழ்முனீசா 
தேனான ஸ்ரீங்கார
பகவதிபுத்திரா தெளிவான வீராதிவீரமாடா
வானான சமானமென்ற சுடலைமாடா
மகத்தான என்வார்த்தை கேட்டிட்டாயே
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments