HomeUncategorizedபோகர் சப்தகாண்டம் 5641 - 5645 of 7000 பாடல்கள்

போகர் சப்தகாண்டம் 5641 – 5645 of 7000 பாடல்கள்


போகர் சப்தகாண்டம் 5641 – 5645 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

5641. கண்டேனே சித்துமகா புருஷர்தம்மை கருவான சித்தொளிவு மென்னைக்கண்டார்
அண்டமதில் குளிகைகொண்டு
யிறங்கிவந்த வப்பனே சிறுபாலா யாரென்றார்கள்
தெண்டமுடன் அடியேனும்
முடிவணங்கி தேற்றமுடன் காலாங்கி சீஷனென்றேன்
சண்டமாருதம்போல
குருசித்துதாமும் தண்மையுடன் மனதுவந்து சிரித்திட்டாரே
விளக்கவுரை :
5642. சிரித்துமே குருபரனார்
என்னைப்பார்த்து சிற்றின்ப சிறுபாலா கேளு கேளு
திரிவான துவாபரயுகத்திலப்பா
திகழுடனே காலாங்கி யடியேன்தானும்  
பரிபோகச் சினேகிதராய்க்
குளிகைபூண்டு பாருலகஞ் சுற்றிவருங் காலந்தன்னில்
சரியான நாகமலை பருவதத்தில்
சட்டமுடன் உச்சிமுகங் கண்டிட்டோமே
விளக்கவுரை :

[ads-post]
5643. கண்டோமே கழுக்குன்று
சித்துதம்மை கைலாசநாதரும் எஙகளுக்கு
திண்மையுடன் உபதேசம்
சொன்னாரங்கே தீர்க்கமுடன் குளிகையது பூண்டுகொண்டு
வண்மையுடன் காலாங்கி
நாதர்தாமும் வளமுடனே சீனபதிக்கேகினார்கள்
உண்மையாய் அடியேனும்
குளிகைபூண்டு வுத்தமனே மலையாளம் வந்திட்டேனே
விளக்கவுரை :
5644. வந்தேனே எந்தனது சினேகபாலா
வகுப்பான மலையாள தேசந்தன்னை
சந்தோஷமாக இக்காலமட்டும்
சதுரான காவணத்தில் அடியேன்தானும்
நிந்தனைகளில்லாமல்
மாண்பர்முன்னே நிஷ்களங்கமாகியல்லோ சமாதிகொண்டே
சிந்தனையை விட்டல்லோ
வையகத்தில் சிறஃபரனை நண்ணியல்லோ இருக்கின்றேனே
விளக்கவுரை :
5645. இருக்கிறேன் துவாபர
யுகந்தொடங்கி எழிலாக இந்நாளும் வுறுதியாக
திருக்கமலம் வீற்றிருக்கும்
தூமாதேவி திகழான சன்னிதியைப் பாதுகாத்து
உருக்கமுடன்
பத்மாசனத்திருந்து வுத்தமனே காலமதை கழித்துக்கொண்டு
பெருகமுடன்
கன்னிமார்பூசையோடும் பேரின்ப நிலைதனிலே நிற்கின்றேனே
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments