HomeUncategorizedபோகர் சப்தகாண்டம் 5646 - 5650 of 7000 பாடல்கள்

போகர் சப்தகாண்டம் 5646 – 5650 of 7000 பாடல்கள்


போகர் சப்தகாண்டம் 5646 – 5650 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

5646. நிற்கின்றேன்
தூமதாபதியிலப்பா நிலையான ஷேத்திரத்தில் வெகுகாலந்தான்
துற்கையெனும் மலையாள
சன்னிதானம் துப்பரவாய் சமாதிமுகம் இருந்துகொண்டு
அற்பமென்ற லோகபதி யதிசயத்தை
யருள்கடந்து கடல்கடந்து வன்பவனாய்
சற்பமென்ற சடாபாரந்
தலையிலேந்தி சாங்கமுடன் மலையாளம் அமர்ந்திட்டேனே
விளக்கவுரை :
5647. இட்டேனே காலாங்கிநாதசீஷா
எழிலாக எந்தனைநீ கண்டதாலே
சட்டமுடன் மனதுவந்து
யுந்தனுக்கு சாங்கமுடன் தூமதாதேவி மந்திரம்
திட்டமுடன் வுந்தமக்கு
யுபதேசங்கள் சிறப்பான தேவதா பிரணவத்தை
வட்டமுடன் உந்தனுக்கு
உபதேசிக்கும் வளமையுடன் எந்தனது பாரந்தானே
விளக்கவுரை :

[ads-post]
5648. பராபரமாங் காலாங்கி நாதசீஷா
பட்சமுடன் பிரணவத்தை சொல்லக்கேளிர்
தீரமுடன் ஓமென்ற வட்சரத்தை
தீர்க்கமுடன் எந்தனுக்கு உபதேசித்தார்
வீரமுடன் தூம் தூம்
என்றேசொல்லி விருப்பமுடன் பிரணவத்தை யுச்சாடித்து
கோரமுடன் கிலி கிலி
யென்றேசொல்லி கொற்றவனே ஸத்தம்பய வென்றிட்டாரே
விளக்கவுரை :
5649. என்றாரே அண்டமதைத் தான்பிடுங்கி எழிலான வாகாயந் தனிலெறிந்து
குன்றான நாற்கடலுந்
தத்தளிக்கக் குறிப்புடனே என்முன்னே ஓடிவாவா
சென்றுமே ஐயுங்கிலியும்
சௌவுமென்று செப்பினார் பிரணவத்தை என்முன்நிற்க
வென்றிடவே லட்சமுரு வோதுவோது
வுத்தமனே வசி வசி சுவாஹாயென்னே
விளக்கவுரை :
5650. என்னவே மண்டலத்தில்
வசியமாச்சு எழிலான தூமதா தேவிமந்திரம்
சொன்னதொரு மந்திரத்தால்
அஷ்டசித்தி சுந்தரனே யுந்தமக்கு பலிக்கும்பாரு
பன்னவே குளிகையது
பூண்டுகொண்டு பாருலகஞ் சுற்றிவருங் காலந்தன்னில்
முன்னமே சித்துமுனி
ரிஷிகள்தாமும் மூர்க்கமுடன் சபித்திடவே வருவார்பாரே
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments