HomeUncategorizedபோகர் சப்தகாண்டம் 5666 - 5670 of 7000 பாடல்கள்

போகர் சப்தகாண்டம் 5666 – 5670 of 7000 பாடல்கள்


போகர் சப்தகாண்டம் 5666 – 5670 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

5666. ஓதவென்றால் புலிப்பாணி
மைந்தாகேளு வுத்தமனே சத்துரு மாரணந்தான்சொல்வேன்
நீதமுடன் சத்துருவின்
பிரணவத்தை நிகட்சியுடன் யாரறிவார் வுலகில்மாண்பர்
தோதமுடன் கருவாளி
காண்பான்பாரு தொல்லுலகில் மற்றவருங் காணமாட்டார்
நாதமென்ற மனோன்மணியாள்
கிருபையாலே நாதாந்த சித்தொளிவுங் காண்பான்பாரே
விளக்கவுரை :
5667. பாரேதான் எதிராளி
சத்துருதன்னை பாங்குடனே மரணத்தாற் கொல்லுதற்கு
நேரேதான் பிரதமைபோல்
பாவுசெய்து நெடிதான மண்பாத்திரந் தனிலமைத்து
சீரேதான் நடுமையம்
வுந்திதன்னில் சிறப்புடனே வறாகமென்ற முள்ளையப்பா
வீரேதான் நடுமையந்
தனிலமைத்து விருப்பமுடன் வசிதனையே மாட்டிடாயே
விளக்கவுரை :

[ads-post]
5668. நாட்டுவாய் காந்தமென்ற
வூசிதன்னை நலம்பெறவே முப்பத்திரண்டுவூசி
நீட்டமுடன் கால்பத்து
கரங்கள்பத்து நெடிதான வசிதனையே நாட்டிட்டாய்நீ
வாட்டமுடன் யிருவிலா
நெஞ்சுதன்னில் வளமான கீலெட்டும் வசிகள்நாட்டி
தேட்டமுடன் பஞ்சகருனை
யெடுத்து தெளிவுடனே பாவுதனில் தூவிடாயே
விளக்கவுரை :
5669. தூவிடவே கருவினது
மார்க்கங்கேளாய் துகளற்ற சாலியனார் மண்ணுங்கூட்டு
ஆவியெனும் மானிடரின்
மாசானச்சாம்பல் வப்பனே எதிராளி பாதநூளும்
நாவிதனார் கையழுக்கும் மலத்தினுப்பும்
நலம்பெறவே தானெடுக்க பஞ்சகோசம்
பாவியெனுஞ் சண்டாளப்
பதுமைக்கப்பா பாங்குடனே ஐங்காயந் தானுஞ்சேரே
விளக்கவுரை :
5670. சேர்த்துமே லலாடமதிலிட்டு
மைந்தா செம்மலுடன் அம்மென்று கும்பித்துமல்லோ
ஆர்த்துமே பிரணவத்தை
யுச்சாடித்து வன்புடனே லட்சமது வுருவுபோடு   
கோர்த்துமே வுருவதனால்
எல்லாஞ்சித்தி கொற்றவனே சின்மயத்திலிருந்துகொண்டு
பார்த்துமே நவகோண
பீடந்தன்னில் பக்குவமாய் சொரூபநிலை நின்றிடாயே
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments