HomeUncategorizedThirukural 171 of 1330 - திருக்குறள் 171 of 1330

Thirukural 171 of 1330 – திருக்குறள் 171 of 1330

Thirukural
171 of 1330 –
திருக்குறள் 171 of 1330

thirukural

குறள் பால் :
அறத்துப்பால். குறள் இயல் :
இல்லறவியல். அதிகாரம் :
வெஃகாமை.
நடுவின்றி நன்பொருள் வெஃகின் குடிபொன்றிக்
குற்றமும் ஆங்கே தரும்.
Translation:
With
soul unjust to covet others’ well-earned store,
Brings
ruin to the home, to evil opes the door.
Explanation:
If
a man departing from equity covet the property (of others), at that very time
will his family be destroyed and guilt be incurred.
கலைஞர் உரை:
மனச்சான்றை ஒதுக்கிவிட்டுப் பிறர்க்குரிய அரும் பொருளைக் கவர்ந்து கொள்ள விரும்புகிறவரின் குடியும் கெட்டொழிந்து, பழியும் வந்து சேரும்.

[ads-post]
மு. உரை:
நடுவுநிலைமை இல்லாமல் பிறர்க்குரிய நல்ல பொருளை ஒருவன் கவர விரும்பினால் அவனுடைய குடியும் கெட்டுக் குற்றமும் அப்போழுதே வந்து சேரும்.
சாலமன் பாப்பையா உரை:
பிறர்க்குரிய பொருளை அநீதியாக விரும்பிக் கவர்ந்தால், கவர்ந்தவனின் குடும்பம் அழியும்; குற்றங்கள் பெருகும்.
மணக்குடவர் உரை:
நடுவுநிலைமையின்றி மிக்க பொருளை விரும்புவானாயின் அதனானே குலமுங்கெட்டு அவ்விடத்தே குற்றமுமுண்டாம், இது சந்தான நாச
முண்டாமென்றது.
பரிமேலழகர் உரை:

நடுவு இன்றி நன்பொருள் வெஃகின் – ‘பிறர்க்கு உரியன கோடல் நமக்கு அறன் அன்றுஎன்னும் நடுவு நிலைமை இன்றி, அவர் நன்பொருளை ஒருவன் வெஃகுமாயின்; குடி பொன்றிக் குற்றமும் ஆங்கே தரும்அவ் வெஃகுதல் அவன் குடியைக் கெடச்செய்து, பல குற்றங்களையும் அப்பொழுதே அவனுக்குக் கொடுக்கும். (குடியை வளரச் செய்து பல நன்மையையும் பயக்கும் இயல்புபற்றி, வெஃகின் என்பார்.’நன்பொருள் வெஃகின்என்றார், ‘பொன்றஎன்பதுபொன்றிஎனத் திரிந்து நின்றது. ‘செய்துஎன்பது சொல்லெச்சம்.).
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments