குறள் பால் :
அறத்துப்பால். குறள் இயல் :
இல்லறவியல். அதிகாரம் :
வெஃகாமை.
அறத்துப்பால். குறள் இயல் :
இல்லறவியல். அதிகாரம் :
வெஃகாமை.
படுபயன் வெஃகிப் பழிப்படுவ செய்யார்
நடுவன்மை நாணு பவர்.
Translation:
Through
lust of gain, no deeds that retribution bring,
lust of gain, no deeds that retribution bring,
Do
they, who shrink with shame from every unjust thing.
they, who shrink with shame from every unjust thing.
Explanation:
Those
who blush at the want of equity will not commit disgraceful acts through desire
of the profit that may be gained.
who blush at the want of equity will not commit disgraceful acts through desire
of the profit that may be gained.
கலைஞர் உரை:
நடுவுநிலை தவறுவது நாணித் தலைகுனியத் தக்கது என்று நினைப்பவர் தமக்கு ஒரு பயன் கிடைக்கும் என்பதற்காக, பழிக்கப்படும் செயலில் ஈ.டுபடமாட்டார்.
[ads-post]
மு.வ உரை:
நடுவுநிலைமை அல்லாதவற்றைக் கண்டு நாணி ஒதுங்குகின்றவர், பிறர் பொருளைக் கவர்வதால் வரும் பயனை விரும்பிப் பழியான செயல்களைச் செய்யார்.
சாலமன் பாப்பையா உரை:
பிறர் பொருளைக் கவர்ந்து அனுபவிக்க எண்ணிப் பழி தரும் செயல்களை, நீதிக்கு அஞ்சுபவர் செய்ய மாட்டார்.
மணக்குடவர் உரை:
தமக்குப் பயனுண்டாக வேண்டிப் பழியொடுபடுவன செய்யார், நடுவன்மைக்கு நாணுபவர். இது
நடுவுநிலைமை வேண்டுபவர் செய்யாரென்றது.
நடுவுநிலைமை வேண்டுபவர் செய்யாரென்றது.
பரிமேலழகர் உரை:
படுபயன் வெஃகிப் பழிப்படுவ செய்யார் – பிறர் பொருளை வௌவினால் தமக்கு வரும் பயனை விரும்பி, அது வௌவுதற்குப் பழியின்கண்ணே படுஞ்செயல்களைச் செய்யார்; நடுவு அன்மை நாணுபவர் – நடுவு நிலைமை அன்மையை அஞ்சுபவர். (‘நடுவு‘ ஒருவன் பொருட்குப் பிறன் உரியன் அல்லன் என்னும் நடுவு.).




