HomeUncategorizedThirukural 303 of 1330 - திருக்குறள் 303 of 1330

Thirukural 303 of 1330 – திருக்குறள் 303 of 1330

Thirukural
303 of 1330 –
திருக்குறள் 303 of 1330

thirukural
குறள் பால் :
அறத்துப்பால். குறள் இயல் :
துறவறவியல். அதிகாரம் :
வெகுளாமை.
மறத்தல் வெகுளியை யார்மாட்டும் தீய
பிறத்தல் அதனான் வரும்.
Translation:
If any rouse thy wrath, the trespass
straight forget;
For wrath an endless train of evils will
beget.
Explanation:
Forget anger towards every one, as
fountains of evil spring from it.
கலைஞர் உரை:
யார்மீது சினம் கொண்டாலும் அதை மறந்துவிட வேண்டும். இல்லாவிட்டால் அந்தச் சினமே தீய விளைவுகளுக்குக் காரணமாகும்.

[ads-post]
மு.வ உரை:
யாரிடத்திலும் சினம் கொள்ளாமல் அதை மறந்து விட வேண்டும், தீமையான விளைவுகள் அச் சினத்தாலேயே ஏற்படும்.
சாலமன் பாப்பையா உரை:
தீமை வருவது எல்லாம் கோபத்தால்தான்; அதனால் எவரிடமானாலும் சரி, கோபம் கொள்வதை விட்டுவிடுக.
மணக்குடவர் உரை:
வெகுளியை யார்மாட்டுஞ் செய்தலை மறக்க; தீயன பிறத்தல் அவ்வெகுளியானே வருமாதலான். இது வெகுளாமை வேண்டுமென்றது.
பரிமேலழகர் உரை:
யார் மாட்டும் வெகுளியை மறத்தல் – யாவர்மாட்டும் வெகுளியை ‘ஒழிக‘, தீய பிறத்தல் ‘அதனான் வரும்‘ – ஒருவற்குத் தீயன எல்லாம் உளவாதல் அதனான் வரும் ஆகலான். (வலியார், ஒப்பார், எளியார் என்னும் மூவர் மாட்டும் ஆகாமையின் ‘யார்மாட்டும்‘ என்றும், மனத்தால் துறந்தார்க்கு ஆகாதனவாகிய தீச்சிந்தைகள் எல்லாவற்றையும் பிறப்பித்தலின் ‘தீய பிறத்தல் அதனான் வரும்‘, என்றும் கூறினார்.).
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments